17.10.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
17.10.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: இலக்கை நோக்கி முன்பைவிட வேகமாக முன்னேறுவீர்கள்.
பரணி: உங்களால் பயன் அடைந்தவர்கள் தக்க சமயத்தில் ஆதரிப்பர்.
கார்த்திகை 1: பழைய நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். உற்சாகமான நாள்.
ரோகிணி: மகிழ்ச்சி கூடும். நினைத்த விஷயம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: மனதில் பல காலம் கனவு கண்ட தேவை ஒன்று நிறைவேறும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: அத்தியாவசியப் பொருள் ஒன்றின் சேர்க்கை உண்டு.
திருவாதிரை: மன உறுத்தல் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள்.

கடகம்: 
புனர்பூசம் 4: பயன் தராத பொருட்களை வாங்கி விரயம் செய்ய வேண்டாம்
பூசம்: ஒவ்வாத உணவால் உடல் நலம் குன்றாமல் கவனமாக இருங்கள்.
ஆயில்யம்: யாரையும் குறைவாகப் பேசி அதன் மூலம் சிரமப்பட வேண்டாம்.

சிம்மம்: 
மகம்: மகிழ்ச்சிகரமான அலைச்சல் அதிகரிக்கும். கோபம் குறையும்.
பூரம்: மனதுக்குப் பிடித்தவர்களின் சந்திப்புக் கிடைத்து மகிழும் நாள்.
உத்திரம் 1: பிறருக்காக ஜாமீன் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நீங்கள் விரும்பியது நடைபெறுவதற்கான அடையாளம் தெரியும்.
அஸ்தம்: வீட்டில் கலகலப்பு கூடும். நீங்கள் விரும்பிய முன்னேற்றம் உண்டு.
சித்திரை 1,2: தாய்வழி உறவினரைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசுவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: மனதில் நினைத்த விஷயம் இனிதே வெற்றி பெறும்.
சுவாதி: பயமும் கவலையும் தீர்வதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
விசாகம் 1,2,3: இளைஞர்கள் கல்வி சம்மந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: மகிழ்ச்சி தரும் செலவுகள் திடீரென அதிகரிக்கலாம்.
அனுஷம்: வரன் தேடும் சலிப்பு நீங்கும். சந்திப்பு ஒன்று சந்தோஷம் தரும்.
கேட்டை: வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவதால் நிம்மதி பிறக்கும்.

தனுசு: 
மூலம்: நண்பர் ஒருவர் செய்யும் நன்மையால் மனம் நெகிழும்.
பூராடம்: பணி மாற எடுத்த முயற்சி தாமதத்துக்குப் பிறகு பலன் தரும்.
உத்திராடம் 1: சகோதரர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். எதிலும் அதிக கவனம் தேவை.
திருவோணம்: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. நட்பு வட்டம் விரியும்.
அவிட்டம் 1,2: நட்பால் நன்மை கிட்டும். இனிய சம்பவம் நடைபெறும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: வியாபார விருத்தி உண்டு. இளைஞர்கள் முன்னேறுவர்.
சதயம்: சகபணியாளர் ஒருவர் உதவிக்கரம் நீட்டுவதால் சிரமம் நீங்கும்
பூரட்டாதி 1,2,3: நீண்ட நாளைய பிரச்னை ஒன்று நல்ல முடிவிற்கு வரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: எதிர்கால நன்மையை உத்தேசித்து எடுத்த முயற்சி வெற்றி தரும்.
உத்திரட்டாதி: நண்பர்கள், உறவினர்களோடு ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
ரேவதி: இரண்டு வித வருமானங்கள் வரும். எதுவும் நிதானமாகவே நடைபெறும்.