விராட் கோலிக்கு திறக்கப்பட்ட மெழுகு சிலை

Prasu
4 years ago
விராட் கோலிக்கு திறக்கப்பட்ட மெழுகு சிலை

துபாயின் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியில் மெழுகுச்சிலை பொம்மை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோலி இந்திய கிரிக்கெட் அணியின் யுனிஃபார்ம் அணிந்து பேட்டிங் செய்வது போல இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கோலிக்காக வைக்கப்படும் இரண்டாவது மெழுகுச் சிலை.

ஏற்கெனவே 2019ல் உலகக் கோப்பை போட்டியின்போது லார்ட்ஸ் மைதானத்தில் கோலிக்காக ஒரு மெழுகுச் சிலை திறந்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. துபாயில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்து மகாராணி, டேவிட் பெக்கம், ஜாக்கி சான் ஆகியோரது மெழுகுச் சிலைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளுக்கு இடையே கடந்த 14ம் தேதி விராட் கோலியின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4