ராட்சசன் பட இயக்குனருடன் கூட்டணி போடும் தனுஷ்..

Prabha Praneetha
3 years ago
ராட்சசன் பட இயக்குனருடன் கூட்டணி போடும் தனுஷ்..

நடிகர் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

இவர்கள் இருவரும் இணைய உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே வெளியானது. ஆனால் தற்போது தான் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம் படத்தின் இயக்குனர் தானாம். திரைக்கதை எழுத மட்டும் இயக்குனர் ராம்குமார் ஓராண்டுக்கு மேல் எடுத்து கொண்டாராம்.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட படங்களை போலவே இந்த படமும் மாறுபட்ட கதைகளத்தில் அமைய உள்ளதாம்.

இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக உள்ளதால் தான் திரைக்கதை எழுத இவ்வளவு நேரம் எடுத்து கொண்டதாக இயக்குனர் ராம்குமார் கூறியுள்ளார்.

ஏற்கனவே 3 வருடங்களாக கதை தயார் செய்து அவரிடம் கூறிய பின் கதை பிடிக்கவில்லை என்று தனுஷ் கூறியதாக வெளிவந்தது புரளிதான் என்பது உறுதியாகிவிட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!