அல்லு அர்ஜுனுடன் இணையும் சூர்யா!

Prabha Praneetha
4 years ago
அல்லு அர்ஜுனுடன் இணையும் சூர்யா!

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தோடு சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படமும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது .

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

கொரோனா முதல் அலையின் போதுகாரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இந்நிலையில் முதல் பாகத்தின் ரிலீஸ் திகதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையின் போது ரிலிஸாக உள்ளது.

அதே நாளில் சூர்யா நடிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படமும் வெளியாகும் எனத் தெரிகிறது. சூர்யாவுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நல்ல வரவேற்புக்கள்  இருப்பதால் அங்கும் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகின்றது .
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4