மோதிக்கொள்ளும் நிரூப், அபிஷேக், பிரியங்கா

Prabha Praneetha
4 years ago
மோதிக்கொள்ளும் நிரூப், அபிஷேக், பிரியங்கா

பிக் பாஸ் சீசன் 5,  சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. மேலும் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை முதல் பஞ்சதந்திரம் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களை நிறைவு செய்துள்ள இந்த டாஸ்கில், நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில், தாமரை, நிரூப், பாவ்னி, இசைவாணி மற்றும் வருண் ஆகியோரிடம் தலா ஒரு நாணயம் உள்ளது.

இதனை இந்த ஐந்து பேரும் சக போட்டியாளர்கள் திருடாத வகையில் பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளதால் யார் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆவார் என்பது இன்று தெரியவரும்.

தற்போது அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ள நிலையில், இந்த லிஸ்டில் உள்ள மூன்று பேரிடம் தலா ஒரு நாணயம் உள்ளது எனவே இதில் யார் வெற்றிபெறுவார் என இன்று தெரியவரும்.

இந்த நிலையில் இன்று வேறு சில டாஸ்குகளும் கொடுக்கப்படுவது இன்று வெளியான ப்ரோமோக்களில் தெரிகிறது. இரண்டாவது ப்ரோமோவில், இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் குறித்து கூற வேண்டும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

தனி அறையில் நடைபெறும் டாஸ்கில், நிரூப் பிரியங்காவின் பெயரை சொல்கிறார். அடுத்ததாக பிரியங்கா நிரூப், அபிஷேக் என கூறுகிறார்.

இதனை தொடர்ந்து வரும் அபிஷேக், பிரியங்காவின் பெயரை சொல்கிறார்  நிகழ்ச்சியில் நிருப், பிரியங்கா, அபிஷேக் மூவரும் ஒன்றாகவே இருக்கின்றனர்.

இந்த நிலையில் மூவரும் மாறி மாறி அவர்களது பெயரை கூறுவதால் தாங்கள் குரூப் இல்லை என நிரூபிக்க இப்படி செய்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4