26.10.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: ஆன்மிக பெரியோரின் ஆசி கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.
பரணி: முன்பு உங்களை வாழ்வில் உயர்த்தியவருக்கு நன்மை செய்வீர்கள்.
கார்த்திகை 1: பழைய சிக்கலில் ஒன்று தீர்ந்து நிம்மதி அளிக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வீடு களைகட்டும் வகையில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
ரோகிணி: இளைஞர்களுக்குப் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் மதிப்பவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பணியாளர்களுக்கு சிறப்பான நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: உங்கள் செயல்பாட்டு முறைகளில் மாற்றம் செய்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: உங்களைத் தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர் மனம் மாறுவார்.
கடகம்:
புனர்பூசம் 4: சிலர் அதிகாரப்பதவி அடைவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.
பூசம்: உறவினர், நண்பர்களால் குழந்தைகளின் முன்னேற்றத்தில் நன்மை உண்டு.
ஆயில்யம்: அடுத்தடுத்து பெறும் வெற்றியால் மனதில் மகிழ்ச்சி பெருகும்.
சிம்மம்:
மகம்: பணியிடத்தில் உங்கள் திறமையை மேலதிகாரிகள் உணர்வார்கள்.
பூரம்: முயற்சி ஒன்று பலிதமாகும். எதிர்பாலினத்தினர் உங்களுக்கு உதவுவர்.
உத்திரம் 1: பொது மக்களின் நன்மைகளுக்கான செயல்களில் ஈடுபடுவீர்கள்.
கன்னி:
உத்திரம் 2,3,4: இளைஞர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்களின் தொழில் சிறக்கும்.
அஸ்தம்: உறவினர்கள் மூலம் செலவுகள் வரக்கூடும். நட்பு வட்டம் விரியும்.
சித்திரை 1,2: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும்படியான செயலை செய்வீர்கள்.
துலாம்:
சித்திரை 3,4: குழந்தைகளுக்கு நன்மைகள் ஏற்படும். சுபச்செலவுகள் உண்டு.
சுவாதி: சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
விசாகம் 1,2,3: தாயாருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு சரியாகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: பணியிடத்தில் நண்பர்களால் ஏற்பட்ட மனஸ்தாபம் தீரும்.
அனுஷம்: வியாபாரிகளின் திட்டம் தாமதத்துக்குப் பிறகு வெற்றியாகும்.
கேட்டை: நன்கு யோசித்துப் பேசினால் சிரமமற்ற நாள். செயலில் கவனம் தேவை.
தனுசு:
மூலம்: இன்றைய நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும். பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்.
பூராடம்: வாக்குவாதத்தின் போது உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டாம்.
உத்திராடம் 1: தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதற்குமுன் நன்கு யோசியுங்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: பங்குச் சந்தை முதலீட்டில் திடீர் ஈடுபாடு வரும்.
திருவோணம்: இளைஞர்களின் திறமை மேம்படும். கலகலப்பான நாள்.
அவிட்டம் 1,2: எதையும் முயன்றே அடைவீர்கள். வெற்றி மகிழ்ச்சி தரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: குடும்ப ஒற்றுமை காரணமாக மனதில் சந்தோஷம் ஏற்படும்.
சதயம்: இயந்திரங்கள், வாகனத்தை இயக்கும் போது நிதானம் அவசியம்.
பூரட்டாதி 1,2,3: செலவுகள் நன்மை தரும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: பெற்றோர் உடல்நலன் பற்றி இருந்து வந்த கவலை தீரும்.
உத்திரட்டாதி: முடிவு எடுப்பதானால் அனுபவசாலியின் ஆலோசனையைப் பெறுங்கள்.
ரேவதி: நண்பர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தெளிவுபடுத்துவீர்கள்.