வெற்றி மேல் வெற்றி வர, பணப்புழக்கம் அதிகரிக்க இந்த ஒரு காய் போதுமே!

#spiritual
வெற்றி மேல் வெற்றி வர, பணப்புழக்கம் அதிகரிக்க இந்த ஒரு காய் போதுமே!

முந்தைய காலங்களில் அனைத்து விதமான நலன்களையும் பெற பூஜை அறையில் இந்த ஒரு காய வைத்து வழிபடுவது வழக்கம். காலப்போக்கில் இக்காய் பற்றிய குறிப்புகள் தெரியாததால் பலரும் இந்த காயை மறந்தே போய்விட்டனர். வெற்றி மேல் வெற்றி பெற இந்த காயை தூள் செய்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம், பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் வைத்து கொள்ளலாம்.

இப்படி பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படும் இந்த காயை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவுக்கு போகலாம்.
இந்த காய் துவர்ப்புத் தன்மை உள்ளதாக இருக்கின்றது. பெண்களுடைய முக அழகிற்கு பெருமளவு பயன்படுத்தப்படும் இந்த காய் ஜாதிக்காய் என்று கூறப்படுகிறது. ஜாதிக்காய் அதிக காரமும் கொண்ட ஒரு காய் வகை ஆகும்.

மலேசியா, இந்தோனேசியா, மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் இந்த காய் உலகம் முழுவதும் தன் செல்வாக்கை நிலைநாட்டி வந்து கொண்டிருக்கிறது. - Advertisement - பல நாட்டினர் இதனை எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருந்தார்கள். ஜாதிக்காய் ஒரு விதை ஆகும். இதனுடைய கனி ஊறுகாய் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஜாதிக்காயின் மேல் இருக்கும் தோல் பகுதி தான் ஜாதிபத்திரி ஆகும்.

இதன் மருத்துவ குணம் சொல்லில் அடங்காதவை. நவீன நோய்களுக்கு மருந்தாக இருக்கும் இந்த அற்புத மூலிகை உலகின் பல்வேறு நாடுகளின் பார்வையில் மிகுந்த வரவேற்ப்பை கொண்டுள்ளது.
ஜாதிக்காயை உட்கொண்டால் போதை ஏற்படும் என்கிற சந்தேகம் எழுந்த பின்பு அதன் ஆய்வில் அந்த சந்தேகம் நீக்கப்பட்டது. ஜாதிக்காயை உணவில் உட்கொண்டால் நரம்பு மண்டலத்தை சரி செய்யும், நினைவாற்றல் பெருகும்,

மன உளைச்சலை போக்கும் அற்புத மருந்தாக இந்த காய் விளங்குகின்றது. ரத்த வெள்ளை அணுக்கள் மூலம் உருவாகக்கூடிய ரத்த புற்றுநோயை தடுக்கும். மேலும் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும். ஜாதிக்காயை தூள் செய்து உட்கொண்டால் வயிற்று உபாதைகள் நீங்கும். முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறவும், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையவும் ஜாதிக்காயை பாலுடன் குழைத்து முகத்திற்கு பயன்படுத்துவார்கள்
குழந்தை பெறுவதில் பிரச்சனை ஆண்கள் ஜாதிக்காய், ஜாதிபத்திரி மருந்துகளை உட்கொள்ள சிறந்த பலன் கிடைக்கும்.

இத்தகைய அற்புத சக்திகள் படைத்த ஜாதிக்காயை நீங்கள் பணம் வைக்கும் இடங்களில் வைத்தால் வீண் விரயங்கள் ஆவது தடுக்கப்படும். பணத்தை ஈர்க்கும் அதீத சக்தி ஜாதிக்காய்க்கு உண்டு. ஜாதிக்காயை பூஜை அறையில் வைத்து வழிபடுவதால் தெய்வீக அருள் உண்டாகும் என்று நம்பப்பட்டு வருகிறது. வெற்றி மேல் வெற்றி பெற செய்யும், காரியம் வெற்றி அடைய, காரிய சித்தி உண்டாக ஜாதிக்காய் தூள் செய்து அதனை நெற்றியில் இட்டுக் கொண்டு செல்லலாம்.

புதிய தொழில் துவங்குபவர்கள், புதிதாக வேலைக்கு செல்பவர்கள், சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் ஜாதிக்காயை எப்பொழுதும் தங்களுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் அதன் தூளை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். ஜாதிக்காயை பெண்கள் பையில் எப்பொழுதும் வைத்திருக்க பணப்புழக்கம் அதிகரிக்கும் மேலும் இல்லத்தரசிகள் தங்கள் அஞ்சரை பெட்டியில் ஜாதிக்காயை வைத்துக் கொண்டால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். இதனால் குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவி சண்டைகள் தீரும். கடன் தொல்லைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது.