சுரைக்காய் தயிர் பச்சடி

Prathees
4 years ago
 சுரைக்காய் தயிர் பச்சடி

தேவையான பொருட்கள் :


சுரைக்காய் - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 1 சிறியது

தயிர் - 1 கப்

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

தாளிக்க

கடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணெய்

பொடிக்க

இஞ்சி - சிறுதுண்டு

பூண்டு - 5

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு
 


செய்முறை :

முதலில் சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லது துருவிக் கொண்டாலும் சரிதான். அதன் பின்னர் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பொடிக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

மேலும் படிக்க... குழந்தைகளுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை... இதோ ரெசிபி...

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் சுரைக்காயை போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும். அதற்கு பின்னர் தேவையான அளவு தன்ணீர் தெளித்து மூடி வேகவிடவும். உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். அடித்த தயிரில் பொடித்த பொருட்களை போட்டு நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் வேக வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கலக்கவும். இப்போது சத்தான சுரைக்காய் தயிர் பச்சடி ரெடி. இந்த பச்சடியை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4