03.11.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
03.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: அன்புக்குரியவர்களால் சமீபத்தில் தோன்றிய ஏமாற்றம் மறையும்.
பரணி: பணிச்சுமை இருக்கும். மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை கூடும்.
கார்த்திகை 1: யோகம் உண்டாகும் நாள். குழந்தைகள் உங்கள்மீது பாசமாக இருப்பர்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: புதிய முயற்சிகள் தொடங்க இன்று பொருத்தமான நாளாகும்.
ரோகிணி: தொழில், பணியில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் இருந்த சிரமங்கள் குறையும். கனவுகள் பலிக்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: கடந்த நாட்களில் இருந்த பதற்றம் முடிவுக்கு வரும்.
திருவாதிரை: விமர்சனங்களால் மனதில் கசப்பு ஏற்பட அனுமதிக்க வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: மனம் மகிழும் நாள். உங்களின் முயற்சியால் கடன் ஓரளவு குறையும்.

கடகம்: 
புனர்பூசம் 4: பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி அடைவீர்கள்.
பூசம்: கலை ஒன்றைக் கற்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
ஆயில்யம்: குடும்பத்தினர் ஆதரவு உண்டு. குழப்பம் தீர்ந்து நிம்மதி வரும்.

சிம்மம்: 
மகம்: கலகலப்பன நாள். பலரது வேலைகளை கவனிக்க வேண்டி வரும்.
பூரம்: நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லும் வார்த்தையை பிறர் தவறாக எடுக்க வாய்ப்புள்ளது.
உத்திரம் 1: பணிச்சுமை காரணமாக மனதில் மிகுந்த பரபரப்பு இருக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: குதுாகலமான நாள். எதிர்பார்த்த நன்மைகள் தக்க சமயத்தில் வரும்.
அஸ்தம்: எதிர்பாராத நல்ல செய்தி வரும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
சித்திரை 1,2: புதிய நபர் ஒருவரால் மகிழ்ச்சி ஏற்படும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

துலாம்: 
சித்திரை 3,4: நீங்கள் நினைத்ததைவிட திட்டம் ஒன்று வெற்றிகரமாக முடியும்.
சுவாதி: தொல்லை தந்தவர்கள் விலகுவர். முக்கிய விஷயத்தில் இருந்த தாமதம் நீங்கும்.
விசாகம் 1,2,3: உறவினர் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நண்பர் ஒருவர் நல்ல செய்தியை தருவார். மகிழ்ச்சி கூடும்.
அனுஷம்: பூமி சம்பந்தமான விஷயங்களில் சாதகமான நிலை வரும்.
கேட்டை: தாமதப்படுத்தப்பட்டு வந்த விஷயம் ஒன்றை முடிப்பீர்கள்.

தனுசு: 
மூலம்: பல நாட்களாகக் குறைந்திருந்த மன அமைதி மீளும்.
பூராடம்: பல நாள் செய்த முயற்சி ஒன்றில் இன்று வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் 1: பணியாளர்கள் வேலையில் முனைப்பாக இருப்பீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: லேசான கவலை தரும்படியான விஷயம் இன்று நடக்கலாம்.
திருவோணம்: செலவுக்கேற்ப வரவு வரும். கற்பனைகளால் பயம் ஏற்படும்.
அவிட்டம் 1,2: தள்ளிப்போன விஷயம் ஒன்று இன்று தடையின்றி நடைபெறும்

கும்பம்: 
அவிட்டம் 3,4: காலையில் கலகலப்பான சூழல் நிலவும். மன நிறைவு உண்டு.
சதயம்: எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குதுாகலம் கூடும்.
பூரட்டாதி 1,2,3: உடன் பணியாற்றும் ஒருவர் உங்களுக்கு பக்கபலமாக உதவி செய்வார்.

மீனம்: 
பூரட்டாதி 4: சகோதரர்களுடன் ஒத்துப்போங்கள். பொறாமைக்காரர் விலகுவார்.
உத்திரட்டாதி: உங்கள் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
ரேவதி: உறவினர், நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.