அருமையான நாட்டு கோழி தெரக்கல் செய்வது எப்படி?

#Cooking
அருமையான நாட்டு கோழி தெரக்கல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • நாட்டு கோழி – ½ கிலோ
  • சின்ன வெங்காயம் –  ¼ கிலோ
  • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • தக்காளி – 2
  • எண்ணெய் – தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • கொத்த மல்லி இலை – சிறிது
  • தாளிக்க:
  • பட்டை – 2
  • சோம்பு – ½ தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி

அரைக்க:

  • தேங்காய் – 1 கோப்பை
  • சோம்பு – 2 தேக்கரண்டி
  • கசகசா – 2 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு – 2 தேக்கரண்டி
  • சீரகம் – 2 தேக்கரண்டி

செய்முறை:

  1. அரைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொருட்களை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
  2. வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கிக் வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொறிய விடவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 
  4. பின் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி பின் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள்,
  5. அரைத்த மசாலா மற்றும் தேவையான உப்பு எல்லா வற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும். 
  6. வெந்தவுடன் கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கவும். சுவையான நாட்டுக்கோழி தெரக்கல் தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4