மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?
#Cooking
Mugunthan Mugunthan
3 years ago
தேவையான பொருட்கள் :
- சிக்கன் – 1/2 கிலோ
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
- தேங்காய் பேஸ்ட் – 3 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 3 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு…
- வரமிளகாய் – 6
- மல்லி – 1 டீஸ்பூன்
- பச்சரிசி – 1 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- கசகசா – 1 டீஸ்பூன்
- பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
- பட்டை – 1 இன்ச்
- கிராம்பு – 3
தாளிப்பதற்கு…
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- பிரியாணி இலை – 1
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- வரமிளகாய் – 2
செய்முறை :
- கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
- வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மஞ்சள் தூள் தூவி, சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
- அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- அடுத்து அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
- குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி மூடி வைத்து இறக்கினால், மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி!!!