07.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: பணியிடத்தில் எதையும் நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம்.
பரணி: வீட்டிலும் வெளியிலும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கார்த்திகை 1: எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: ஆர்வமுடன் செய்த முயற்சி ஒன்று சந்தோஷப் பலன் தரும்.
ரோகிணி: அக்கம்பக்கத்தினருடன் இருந்த வருத்தம் உங்கள் முயற்சியால் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: சிக்கலான பிரச்னை ஒன்றில் சுமுகமான முடிவை எட்டுவீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பணியிடம் பற்றி மனதில் நிலவி வந்த கவலை தீரும்.
திருவாதிரை: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு நிம்மதி தரும்.
புனர்பூசம் 1,2,3: மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
கடகம்:
புனர்பூசம் 4: பணியிடத்தில் உங்கள் நிலை நிம்மதியளிக்கும் விதமாய் இருக்கும்.
பூசம்: மனதடுமாற்றம் ஏற்படுத்திக் கொண்டிருந்த கவலை ஒன்று தீரும்.
ஆயில்யம்: தவறான வழியில் சென்று நிம்மதியை இழக்க வேண்டாம்.
சிம்மம்:
மகம்: தொழில், வியாபாரம் நிதானமாக நடந்தாலும் லாபம் வரும்.
பூரம்: வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் வெற்றி பெறுவீர்கள்.
உத்திரம் 1: நன்மைகள் மெல்ல நடக்கும். பரிசுப்பொருள் கிடைக்கும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: சுபநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும்.
அஸ்தம்: வாகனங்களில் செல்லும் போது அதீத வேகம் வேண்டாம்.
சித்திரை 1,2: மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.
துலாம்:
சித்திரை 3,4: பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை நிறையும்.
சுவாதி: நேற்றிருந்த கவலை ஒன்று இன்று மாறி நிம்மதி பிறக்கும்.
விசாகம் 1,2,3: யார் பற்றியும் யாரிடமும் தவறாக பேசி அவதிக்குள்ளாக வேண்டாம்.
விருச்சிகம்:
விசாகம் 4: பிரச்னை ஒன்று முடிவுக்கு வருவதால் நிம்மதி மீளும்.
அனுஷம்: சகபணியாளர்கள் இடையே பழகும்போது கவனமாக இருப்பது நல்லது.
கேட்டை: பணியிடத்தில் கோபத்தை தவிர்ப்பீர்கள். பரபரப்பான நாள்.
தனுசு:
மூலம்: பெரிய முதலீட்டை சற்றே தள்ளிப் போடுவது சிறந்தது.
பூராடம்: பணியிடத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
உத்திராடம் 1: குடும்பத்தினர்களுடன் இணைந்து திட்டமிட்டு பலன் அடைவீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: உடனடி முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகலாம்.
திருவோணம்: காத்திருந்த நல்ல செய்தி ஒன்று மாலைக்குள் வரும்.
அவிட்டம் 1,2: குழந்தைப்பேறு, திருமணம் போன்ற நல்ல செய்திகள் உண்டு.
கும்பம்:
அவிட்டம் 3,4: எந்தப் பெரிய முடிவையும் தீர ஆலோசித்து எடுக்க வேண்டும்.
சதயம்: வேலைப்பளு அதிகமாகும். பயணம் பற்றி முடிவாகும்.
பூரட்டாதி 1,2,3: நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு உடனுக்குடன் தீரும்.
மீனம்;
பூரட்டாதி 4: குழந்தைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும்.
உத்திரட்டாதி: உறவினரால் ஏற்பட்ட வருத்தம் ஒன்று அவராலேயே தீரும்.
ரேவதி: மற்றவர் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோர் மீது பாசம் அதிகரிக்கும்.