இன்று பிக் பொஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் சுருதி

Prasu
4 years ago
இன்று பிக் பொஸ் வீட்டில் இருந்து   வெளியேறிய போட்டியாளர் சுருதி

வாக்குகளின் அடிப்படையில் சுருதி இன்று எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் கடந்த வாரத்தில் தாமரை உடை மாற்றும் அறையில் இருக்கும்போது காயின் திருடி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நிலையில் தற்போது வெளியேறி இருக்கிறார்.

தீபாவளி வாரம் என்பதால் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் கொண்டாட்டத்தில் கலைக்கட்டி இருந்தது. அதனால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என பிக் பாஸ் ரசிகர்கள் நினைத்து இருந்தனர். ஆனால் கமல் பேசும்போது கண்டிப்பாக இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் அது மட்டுமின்றி இன்று கமலின் பிறந்தநாள் என்பதால் எலிமினேஷன் வேண்டாம் என போட்டியாளர்கள் கேட்டனர். ஆனால் கமல் இன்றே எலிமினேட் செய்துவிடவா என கமல் கிண்டலாக கேட்டார்

இந்நிலையில் தற்போது சுருதி இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார்.

அவர் கடந்த வாரம் தாமரை உடை மாற்றும் அறையில் இருந்து காயின் திருடினார் என கடும் விமர்சனத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனும் அவரை தாமரையிடம் மன்னிப்பு கேட்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4