08.11.2021 இன்றைய ராசி பலன்

#Astrology
Prasu
2 years ago
08.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும்.
பரணி: சொத்து விஷயங்களில் கவனமாக முடிவெடுப்பது நல்லது.
கார்த்திகை 1: எதிலும் நிதானம், கவனம் தேவை. பணம் வர வாய்ப்புள்ளது.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: முக்கிய விஷயங்களில் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசிப்பீர்கள்.
ரோகிணி: படபடப்பு, மறதி காரணமாக ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீரும்.
மிருகசீரிடம் 1,2: திருமண விஷயமாக நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: திட்டம் ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும். தைரியம் கூடும்.
திருவாதிரை: சொத்து சம்பந்தமாக வாரிசுதாரர்களிடையே உடன்பாடு உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: சொந்தங்களின் உதவியுடன் சிறப்பாக செயல்படுவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: முன்பு தடைப்பட்ட நல்ல விஷயம் ஒன்று இன்று நிறைவேறும்.
பூசம்: சொத்து வாங்குவது சம்பந்தமாக நல்ல முடிவுகள் வரும்.
ஆயில்யம்: உங்களை கண்டுகொள்ளாமல் இருந்த உறவுகள் உதவி கேட்டு வருவர்.

சிம்மம்: 
மகம்: மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் நல்லமுறையில் குணமடைவர்.
பூரம்: பேச்சில் கவனம் தேவை. உங்கள் மீது பழிவராமல் காத்துக்கொள்ளுங்கள்.
உத்திரம் 1: பூமி யோகம் உண்டாகும். நினைவாற்றல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நல்ல காரணங்களுக்காக இன்று வெளியூருக்கு செல்வீர்கள்.
அஸ்தம்: வீடு, நிலம் வாங்குவீர்கள். அழகுணர்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை 1,2: வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

துலாம்: 
சித்திரை 3,4: அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும்.
சுவாதி: சுயதொழில் தொடங்கும் முயற்சியில் இன்று ஈடுபடுவீர்கள்.
விசாகம் 1,2,3: நடக்குமா என்று கவலைப்பட்ட விஷயம் சாதகமாக கூடி வரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: எதிலும் சாதகமான நிலை இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம்: நீங்கள் முயன்ற வேலை சம்பந்தமாக நல்ல செய்தி வரும்.
கேட்டை: மற்றவர்களின் ஒத்துழைப்பு காரணமாக வெற்றி பெறுவீர்கள்.

தனுசு
மூலம்: அலுவலக விஷயங்களில் யாருடனும் விவாதம் செய்ய வேண்டாம்.
பூராடம்: சிலருக்கு வங்கி, அரசாங்கப் பணி கிடைக்கும் யோகம் உள்ளது.
உத்திராடம் 1: பதவி உயர்வு சம்பந்தமாக மகிழ்ச்சியான செய்தி வரும்.

மகரம்
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சி கூடும். கலைத்துறையினர் நல்ல பலன் காண்பர்.
திருவோணம்: குடும்ப மகிழ்ச்சி சீராக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
அவிட்டம் 1,2: உங்களின் பயணங்கள் லாபமாக அமையும். கலை ஆர்வம் உண்டாகும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உங்கள் மீது யாரும் கோபப்பட முடியாத அளவு நடந்து கொள்வீர்கள்.
சதயம்: கவலை தீரும். பணவரவு இருக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும்.
பூரட்டாதி 1,2,3: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: மனக்குறை நீங்கும். சண்டைகள் தீர்ந்து சமாதானமாகும்.
உத்திரட்டாதி: செலவினம் மகிழ்ச்சி அளிக்கும். குழந்தைகளால் நன்மை ஏற்படும்.
ரேவதி: கவலை ஏதுமின்றி ஆர்வமுடன் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்