சீஸ் வெஜிடபிள் ஆம்லெட் செய்வது எப்படி?
#Cooking
Mugunthan Mugunthan
3 years ago
தேவையானவை:
- மைதா மாவு – அரை கப்,
- துருவிய பன்னீர் – 50 கிராம்,
- பால் – அரை கப்,
- பச்சை மிளகாய் – 2, வெங்காயம்,
- குடமிள காய் – தலா ஒன்று,
- கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
- சீஸ் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்,
- தக்காளி சாஸ் – தேவையான அளவு,
- மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
- பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு,
- நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். மைதாவை பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
- இதனுடன் துருவிய பன்னீர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கொத்த மல்லித் தழை, கேரட் துருவல், சீஸ் துருவல் ஆகிய வற்றை கலந்து வைக்கவும்.
- தோசைக் கல்லில் நெய் தடவி மைதா – பன்னீர் கலவையை சற்று கனமாக ஊற்றி மேலும் சிறிது நெய் விட்டு, அதன் மீது காய்கறி – சீஸ் கலவையை தூவி ஒரு மூடி போட்டு வேக விடவும்.
- வெந்ததும் அதன் மீது தக்காளி சாஸை லேசாக தடவி, சாப் பிடக் கொடுக்கவும்.