09.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: பொல்லாதவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் இன்று நீங்கும்.
பரணி: குடும்ப சூழலால் மனநிறைவும், நிம்மதியும் ஏற்படும்.
கார்த்திகை 1: பண விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: பணிகளை முனைந்து செய்வதால் அலுவலகத்தில் உங்களின் புகழ் கூடும்.
ரோகிணி: ஜாமீன் கையெழுத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மிருகசீரிடம் 1,2: செலவுகளை சமாளிக்க கடன் வாங்காதீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: அடுத்தவரை மட்டம் தட்டுவது போல் நடக்க வேண்டாம்.
திருவாதிரை: மகிழ்ச்சியுடன் கூடிய பரபரப்பான சூழல் குடும்பத்தில் உருவாகும்.
புனர்பூசம் 1,2,3: உங்களிடம் வம்பு பேசியவர்கள் வாயடைத்துப் போகும்படி சம்பவம் நடக்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி இலக்கைத் தொடுவீர்கள்.
பூசம்: மகிழ்ச்சியான நாள். உங்களின் பழைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஆயில்யம்: கோயில்களுக்கு செல்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு உண்டு.
சிம்மம்:
மகம்: உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பதால் நலமான நாள்.
பூரம்: உங்களிடம் வம்பு பேசியவர்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
உத்திரம் 1: பணத்தை கவனமாக கையாளவும். நல்ல நண்பர் கிடைப்பார்.
கன்னி:
உத்திரம் 2,3,4: பணியில் கவனம் அதிகரிக்கும். பதவி உயர்வு பெறுவீர்கள்
அஸ்தம்: வேலைகளை இழுத்து போட்டு செய்வதால் அசதி வரும்
சித்திரை 1,2: ஊக்கத்தோடு செயல்படுவீர்கள். நீண்ட நாளாக இருந்த கவலை தீரும்.
துலாம்:
சித்திரை 3,4: பெருமை வந்து சேரும். பிரச்னை ஒன்று நல்லபடியாக முடியும்.
சுவாதி: உற்சாகத்தோடு பணிபுரிந்து அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: தள்ளிப்போட்டுக் கொண்டு வந்த விஷயங்களை முடிக்கும் நாள்.
விருச்சிகம்:
விசாகம் 4: குடும்ப விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
அனுஷம்: மற்றவர்களின் பிரச்னைகளை தீர்ப்பது பற்றி யோசிப்பீர்கள்.
கேட்டை: உங்களின் சிந்தனை செயல் வடிவம் பெறும். தாமதப்பட்ட நன்மை தேடி வரும்.
தனுசு:
மூலம்: சிறு சிறு தடைகள் காரணமாக தேவையற்ற கவலைக்கு உள்ளாவீர்கள்.
பூராடம்: இன்றைய நாள் அமைதியாக செல்லும். ஓய்வு அதிகரிக்கும். பயம் நீங்கும்.
உத்திராடம் 1: சுவையான விருந்து உண்டு மகிழ்வீர்கள். கவலை தீரும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: சில தீயவர்கள் உங்களை விட்டு விலகுவது நன்மைக்கே
திருவோணம்: பல நாள் முயற்சி ஒன்று கைகூடுவதால் மகிழ்ச்சி ஏற்படும்.
அவிட்டம் 1,2: நட்பு வட்டத்தில் ஏற்படும் விரிசல் உங்களை பாதிக்காது.
கும்பம்:
அவிட்டம் 3,4: பழைய முதலீடுகள் லாபம் தருவது பற்றிய செய்தி வரும்.
சதயம்: நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவி செய்வார். வீண் செலவு குறையும்.
பூரட்டாதி 1,2,3: தீயவர்களை விட்டு விலகுவீர்கள். நேற்றைய அதிருப்தி தீரும்.
மீனம்:
பூரட்டாதி 4: சொத்து பற்றி முடிவு செய்வீர்கள். நகை வாங்குவீர்கள்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் மதியம் நல்லதொரு செய்தி வந்து சேரும்.
ரேவதி: பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் பொறுப்பு கூடுதலாகும்.