10.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: பணியாளர்களுக்கு பயன்மிக்க அறிவுரைகள் கிடைக்கும்.
பரணி: உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
கார்த்திகை 1: முன்பு தடைப்பட்ட விஷயங்கள் இன்று நல்லபடியாக முடியும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். பணியிடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி: நேற்று தடைபட்ட நன்மைகள் இன்று நடைபெறும்.
மிருகசீரிடம் 1,2: கவனமாகப் பேசுங்கள். பணியிடத்தில் இணக்கம் தேவை.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: தவறாக பேசி வம்பில் மாட்டுவதை தவிர்க்க வேண்டும்.
திருவாதிரை: உங்களுக்கான பொறுப்பை நன்கு உணர்ந்து செயல்படுங்கள்.
புனர்பூசம் 1,2,3: உடல் அசதி நீங்கும். ஆன்மிகப் பணிகள் செய்வீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: உற்சாகமான மனநிலை ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
பூசம்: அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். பயணம் பலன் தரும்.
ஆயில்யம்: மனதில் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நல்ல செய்தி வரும்.
சிம்மம்:
மகம்: பல காலம் கழித்து உடன்பிறந்தவர்கள் நெருங்கி வருவார்கள்.
பூரம்: பெரிய இடத்து தொடர்பு கிடைக்கும். உங்களின் எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1: வேகமாக இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனம் நிறையும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் சங்கடத்தில் இருந்து தப்புவீர்கள்.
அஸ்தம்: ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை 1,2: இன்று நல்லதே நடக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்:
சித்திரை 3,4: உடல் அசதியும், மனச்சோர்வும் நீங்கும். சுபச்செய்தி உண்டு.
சுவாதி: சுபச்செலவுகள் செய்து மகிழ்வீர்கள். மன மாற்றம் உண்டாகும்
விசாகம் 1,2,3: நிதானப்போக்குடன் எதையும் அணுகும் தன்மையால் பயன் பெறுவீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: ஊர்விட்டு ஊர் போக வேண்டியிருக்கும். சற்று களைப்பு இருக்கும்.
அனுஷம்: சுபநிகழ்ச்சி ஒன்றிற்காக நண்பர்களின் இனிய சந்திப்பு நிகழும்.
கேட்டை: மகிழ்ச்சி உண்டு. பாராட்டு கிடைக்கும். நிறைவான நாள்.
தனுசு:
மூலம்: வரவேண்டிய நல்ல செய்தி வரும். அமைதியுடன் இருப்பீர்கள்.
பூராடம்: பணியாளர்கள் நிதானமாக முடிவு எடுத்து நிம்மதி பெறுவீர்கள்.
உத்திராடம் 1: சிலருக்கு சுபச்செய்தி உண்டு. குடும்பத்தில் குதுாகலமான சூழல் நிலவும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: பேச்சு வார்த்தைகளில் சுமுகமான உடன்பாடு ஏற்படும்.
திருவோணம்: வெளிநாட்டில் உள்ள உறவினரிடம் இருந்து நல்ல செய்தி வரும்.
அவிட்டம் 1,2: வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும். மனநிம்மதி உண்டு.
கும்பம்:
அவிட்டம் 3,4: பொழுது போக்கு அம்சம் உங்களை திசை திருப்பும். கவனம் தேவை.
சதயம்: பணத்தேவை சற்று அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: மனதுக்கினியவர்களின் சந்திப்பு நிகழும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
ரேவதி: வாழ்க்கைத்துணைக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.