12.11.2021 இன்றைய ராசி பலன்

#Astrology
Keerthi
2 years ago
12.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்:

அசுவினி: காத்திருந்த நல்ல விஷயம் ஒன்று இன்றைக்கு நடைபெறும்.
பரணி: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்டு உணரச் செய்வீர்கள்.
கார்த்திகை 1: நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சி ஒன்றில் சிறந்த பலன்கள் ஏற்படும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: உற்சாகத்துடன் செயல்பட்டு தள்ளிப்போட்ட பணிகளை முடிப்பீர்கள்.
ரோகிணி: போட்டிகளை சமாளிப்பீர்கள். பணியிடத்தில் பகை ஒன்று தீரும்.
மிருகசீரிடம் 1,2: போராடி வெல்வீர்கள். முயற்சி தாமதமானாலும் முடிவு சுபம்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: சிக்கல்கள் வராமல் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
திருவாதிரை: குடும்பத்தினரை அனுசரித்து சென்று அமைதி காண்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: அவசரப்பட்டு அதிக முதலீடுகளை இன்று செய்ய வேண்டாம்.

கடகம்: 
புனர்பூசம் 4: சில விஷயங்களில் திட்டமிட்டதற்கு மாறாக நடக்கக்கூடும்.
பூசம்: வேண்டாத சிலரின் செயல்பாடுகளால் அமைதி குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆயில்யம்: கவலை தீரும். இளைஞர்கள் முயற்சியைக் கூட்டுவீர்கள்.

சிம்மம்: 
மகம்: நேற்றைய வருத்தங்கள் தீரும். பெண்கள் மூலம் விருப்பம் கைகூடும்.
பூரம்: வியாபாரத்திலும், பணியிடத்திலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
உத்திரம் 1: எந்த விஷயம் பற்றியும் பயப்பட வேண்டாம். மகிழ்ச்சி கூடும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புகள் வரும். கவலைகள் குறையும்.
அஸ்தம்: உங்களின் முயற்சிகள் கைகூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்
சித்திரை 1,2: எதிர்பாலினத்தினர் உதவி செய்வர். கைமாற்று வாங்க வேண்டிவரும்.

துலாம்: 
சித்திரை 3,4: நிம்மதியான நாள். இன்றைய நிகழ்வுகள் மனமகிழ்ச்சி தரும்.
சுவாதி: நேர்மையான உழைப்பால் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
விசாகம் 1,2,3: கவர்ச்சி அம்சம் அதிகரிப்பதால் உங்களின் செல்வாக்கு கூடும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள். தைரியம் கூடும்.
அனுஷம்: சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கேட்டை: நவீன ரக வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரியும்.

தனுசு: 
மூலம்: மனதில் இருந்த சுமை குறையும். பணி பற்றிய விஷயம் உறுதியாகும்
பூராடம்: சற்றும் எதிர்பாராத நபர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்.
உத்திராடம் 1: பணியிடத்தில் இருந்து வந்த சிரமங்களும், சிக்கலும் குறையும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: அதிக வட்டி கடனை ஒரு வழியாக அடைத்து நிம்மதி அடைவீர்கள்.
திருவோணம்: நெருங்கிய நண்பர்களின் இயல்பை புரிந்து கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: இதமாகப் பேசி பிரிந்திருந்த குடும்பங்களை இணைப்பீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பிள்ளைகளுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
சதயம்: வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு எதிராக பேசிய உறவினர் தவறை உணர்வார்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: குடும்பத்தில் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
உத்திரட்டாதி: குழந்தைகள் உங்களுக்கு ஒத்துழைப்பர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி: பணியிடத்தில் உங்கள் கை ஓங்கும். கற்பனை பயங்கள் வரலாம்.