இறைச்சி போன்று சுவைக்கும் சோயா மீற் குழம்பு வைப்பது எப்படி?
#Cooking
Mugunthan Mugunthan
3 years ago
தேவையானவை:
- சோயா உருண்டை அல்லது மீல்மேக்கர் - 15,
- சின்ன வெங்காயம் - 10,
- பூண்டு - 10 பல்,
- தக்காளி - 1,
- சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
- உப்பு - தேவைக்கேற்ப,
- புளி - 1 எலுமிச்சை அளவு.
அரைக்க:
- தேங்காய் துருவல் -2 டேபிள் ஸ்பூன்,
- முந்திரிப் பருப்பு - 4,
- சோம்பு - கால் டீஸ்பூன்.
தாளிக்க:
- கடுகு அரை - டீஸ்பூன்,
- சோம்பு கால் - டீஸ்பூன்,
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
- பெருங்காயம் -1 சிட்டிகை,
- எண்ணெய் -6 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
- வெங்காயத்தையும் பூண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
- சோயா உருண்டைகளை, கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- நீரை வடித்து விடவும். வாணலியில் சிறிது எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- அத்துடன் தக்காளியையும் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு உப்பு, புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி சேர்க்கவும்.
- நன்கு கொதித்ததும், சோயா உருண்டைகளை குழம்பில் போட்டு, சோயா உருண்டைகளில் குழம்பு சாரும் வரை கொதிக்க விடவும்.
- குழம்பு சிறிது கெட்டியானதும் அரைத்ததைக் கரைத்து ஊற்றி, கொதித்ததும் இறக்கி விடவும்.