13.11.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
13.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: குழந்தைகள் நல்ல வழியில் நடைபோடுவார்கள்.
பரணி: தோற்றப்பொலிவு கூடும். நோய் பற்றிய கற்பனையில் இருந்து மீளுவீர்கள்.
கார்த்திகை 1: அலுவலகத்தில் இருந்த பிரச்னை தீரும். உங்களை தாழ்த்தி பேசியவர் மாறுவார்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: வெளிநாடு சம்பந்தப்பட்ட புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
ரோகிணி: வீட்டில் அமைதி திரும்பும். பயம் நீங்கும். உங்களின் முகம் மலரும்.
மிருகசீரிடம் 1,2: சற்றும் எதிர்பாராத வகையில் பணம் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: காணாமல் போன முக்கிய பொருள் ஒன்று கிடைக்கும்.
திருவாதிரை: வாழ்க்கைத்துணையின் செயல் ஒன்றால் நிம்மதி வரும்.
புனர்பூசம் 1,2,3: தவறான பழக்கம் உள்ளவர்களிடம் இருந்து ஒதுங்குவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். மனம் அமைதியுறும்
பூசம்: யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். அதுவே நல்லது.
ஆயில்யம்: நகைச்சுவை என்று பேசுவது தவறாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்: 
மகம்: வாகனத்தில் செல்லும் போது கவனமாகச் செல்வது நல்லது.
பூரம்: குடும்பத்தினர் மூலம் பல நன்மைகள் நிகழும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் 1: சொத்து வாங்கும் போது சான்றிதழ்களை சரிபார்த்து வாங்குங்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: தள்ளிப்போன வழக்கு சாதகமாகும். உறவினர் இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
அஸ்தம்: இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று முடிவடையும்.
சித்திரை 1,2: தாயாருக்கு சந்தோஷம் அளிக்கும் செய்தி வரும்.

துலாம்: 
சித்திரை 3,4: அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை விரைந்து அடைப்பீர்கள்.
சுவாதி: உடன்பிறந்தவர்களால் உதவிகள் உண்டு. நிம்மதியான நாள்.
விசாகம் 1,2,3: மனப்போராட்டங்கள் குறையும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: இத்தனை நாளாக குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும்.
அனுஷம்: உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவர். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும்.
கேட்டை: முடிக்கப்படாமல் இருந்த பத்திர பதிவு பற்றி நல்ல செய்தி வரும்.

தனுசு: 
மூலம்: வாகனத்தை சீர் செய்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
பூராடம்: தோல்வி மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். பணவரவு உண்டு.
உத்திராடம் 1: சிறிய செலவுகள் இருக்கும். புதிய நட்பு கிடைக்கும்

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் ஒருவருக்கு வாழ்க்கைத்துணை அமையும்.
திருவோணம்: எதிர்மறை எண்ணங்களை மனதை விட்டு விரட்டுவது நல்லது.
அவிட்டம் 1,2: நல்ல நண்பர்களை இழக்காமல் பாதுகாத்துக் கொள்வீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பிள்ளைகளுக்கு நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும்.
சதயம்: தடைப்பட்ட விஷயங்கள் மீண்டும் துவங்கி நல்லபடியாக முடியும்.
பூரட்டாதி 1,2,3: பிள்ளைகள் நல்ல வழியில் வாழ்வை அமைத்துக் கொள்வார்கள்.

மீனம்:
பூரட்டாதி 4: குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நல்ல முறையில் திட்டமிடுவீர்கள்
உத்திரட்டாதி: பணியிடப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு காண்பீர்கள்
ரேவதி: இன்று பேச்சிலும் பணியிலும் கவனமாக இருந்துவிட்டால் போதும்.