ஏழு ஜென்ம பாவம் தீர, நமது கர்ம வினைகள் நம்மை விட்டு விலக யாருக்கு என்ன பூஜை செய்ய வேண்டும்?
வசதி படைத்த மனிதனுக்கும் அவர்கள் மனதில் ஏதேனும் ஒரு வருத்தம் சூழ்ந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றினாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விதமான வருத்தம் தரக்கூடிய தருணங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.
அவ்வாறு துன்பம் இல்லாத மனிதன் என்று எவரும் இல்லை. ஒருசிலர் பலவித முயற்சிகள் செய்தாலும் வாழ்க்கையில் முன்னேறாமல் பெரும் துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
கடவுள் பக்தி அதிகமாக இருந்தாலும், கடின உழைப்பு அதிகமாக இருந்தாலும் நமது பாவ புண்ணியங்களை பொருத்து தான் நமது வாழ்க்கையில் சந்தோஷமும், துன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். இவ்வாறு துன்பத்திற்கு காரணமாக அமையும் நமது கர்மவினைகளை நம்மை விட்டு அகற்ற குருமார்களுக்கு இந்த பாத பூஜையை செய்திட வேண்டும்.
மனிதனின் உடலில் இருக்கும் கால்களைப் பயன்படுத்தி தான் பூமியில் நாம் நடந்து வருகிறோம். எனவே நமது பாதத்தில் பலவித அழுக்குகளும், தேவையில்லாதவற்றையும் நாம் மிதித்திருப்போம். ஆயினும் ஒருவரிடம் அவரது ஆசீர்வாதத்தையும், அன்பையும் பெற வேண்டி அவர்களின் பாதத்தை தொட்டு தான் வணங்குகின்றோம்.
இவ்வாறு நமது உடம்பில் நாம் சற்றும் மதிக்காத உறுப்பான கால்களில் அணியக்கூடிய பாதணிகளை தன் தலையில் சுமந்து கொண்டு, தனது நாட்டிலன் சிம்மாசனத்தில் வைத்து ஒரு மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். இவ்வாறு பெரிய மரியாதைக்குரிய ஒரு விஷயமாக நமது கால்கள் பார்க்கப்படுகிறது.
வயதில் பெரியவர்களையோ அல்லது சிறியவர்களையோ தெரியாமல் நம் கால்களால் உதைத்து விட்டோம் என்றால் உடனே குனிந்து அவர்களை தொட்டு வணங்குவோம். இவ்வாறு குனிந்து அவர்களை தொட்டு வணங்கும் பொழுது நாம் செய்த பாவம் மறைந்து விடும். ஆனால் அப்படி செய்யாமல் போனால் அவர்களை உதைத்ததற்கான கர்மவினை நம்மையே சேரும்.
ஒருவரின் காலில் விழுந்து ஆசி பெறும் பொழுது நமது பாவங்கள் அனைத்தும் மறைய ஆரம்பிக்கிறது. நமது கர்மவினைகளின் தாக்கமும் குறைகிறது. இதன் காரணமாக தான் திருமணத்தின் போது பெரியவர்களின் பாதத்திற்கு பாத பூஜை செய்கிறோம். இதில் மிகவும் முக்கியமாக நமக்கு கல்வி மற்றும் கலைகள் சொல்லித்தந்த குருமார்களுக்கு பாத பூஜை செய்வதன் மூலம் நமது ஏழு ஜென்ம பாவங்களும், கர்மவினைகளும் அடியோடு மறைகின்றன.
இவ்வாறு குருவிற்க்கு பாத பூஜை செய்யும் பொழுது அந்த கடவுளின் ஆசிர்வாதத்தையே நாம் நேரடியாக பெறுவதற்கு சமமாகும்.
அடுத்ததாக இறைவனை அனு தினமும் நினைத்துக்கொண்டு, அவருக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கின்ற ஆன்மீகவாதிகளின் பாதத்திற்கு பாத பூஜை செய்வதும் நமது பாவங்களில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாக அமைகிறது.
எனவே எப்பொழுதும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதற்கும், அவர்களுக்கு பாதபூஜை செய்வதற்கும் எந்தவித தயக்கமுமின்றி செய்து வாருங்கள். அது நமது வாழ்க்கைக்கு பெரும் புண்ணியத்தை தான் சேர்க்கிறது. எனவே இதனை நினைவில் கொண்டு உங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றிக்கொள்ள இறைவனை வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.