ரஜினி படம் எனக்கு வேணாம்!. வாய்ப்பை மறுத்த நெல்சன்

#TamilCinema
Prasu
4 years ago
ரஜினி படம் எனக்கு வேணாம்!. வாய்ப்பை மறுத்த நெல்சன்

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட்.

சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ரஜினியை இயக்கும் வாய்ப்பு நெல்சனை தேடி வந்தது எனக்கூறினால் நம்புவீர்களா?. ஆம் இது உண்மைதான். அண்ணாத்த படம் முடிவடையும் நிலையில், நெல்சனை அழைத்து இதுபற்றி பேசியது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால், பீஸ்ட் படம் முடிவதற்கே இன்னும் சில மாதங்கள் ஆகும். எனவே, இதை முடிக்காமல் என்னால் வேறு படத்தை இயக்க செல்ல முடியாது என கை விரித்து விட்டாராம். அதாவது, ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது வேறு படத்தை இயக்க ஒப்புக்கொள்ளக் கூடாது என்பது நெல்சனின் பாலிஸியாம்..

 ரஜினி பட வாய்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. மற்ற இயக்குனர்கள் எந்த ஹீரோவின் படத்தை இயக்கி வந்தாலும் அதை விட்டுவிட்டு ரஜினி படத்திற்கு சென்றுவிடுவார்கள்.

ஆனால், நெல்சன் அதை செய்யவில்லை. ஒருபக்கம் ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பது உறுதியாகியுள்ளது. அனேகாமாக ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4