14.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: வாழ்க்கைத்துணைக்கு ஏற்பட்டிருந்த பிரச்னை தீரும்.
பரணி: புதிய விஷயங்களில் கவனமாக காலை எடுத்து வையுங்கள்.
கார்த்திகை 1: வீடு பற்றிய கவலை ஒன்று சரியாகி நிம்மதி பிறக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். உறவினரை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரோகிணி: சகோதர சகோதரிகளுடன் இருந்த சிறு பிரச்னை ஒன்று தீரும்
மிருகசீரிடம் 1,2: இன்று யாரைப் பற்றியும் விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: குழந்தைகள் பற்றிய மனஅழுத்தம் இன்றைக்கே சரியாகிவிடும்.
திருவாதிரை: சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
புனர்பூசம் 1,2,3: தந்தையின் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
புனர்பூசம் 4: பொழுது போகும். பழுதான வாகனத்தைச் சீரமைப்பீர்கள்.
பூசம்: பிறரிடம் கனிவாகப் பேசுவீர்கள். ஆபரணம் சேரும். பணம் வரும்.
ஆயில்யம்: நீங்கள் யாருடன் மோதினாலும் அவர் பக்கம்தான் நியாயம் இருக்கும்.
சிம்மம்:
மகம்: கவனமாக நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பூரம்: கருத்து வேறுபாடு கொண்டவரிடம் மன்னிப்புக் கேட்பீர்கள்.
உத்திரம் 1: குழந்தைகளை அதிகம் கண்டிக்க வேண்டாம். வெற்றி வாய்ப்பு வரும்
கன்னி:
உத்திரம் 2,3,4: இன்று உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அஸ்தம்: உங்களை பற்றி யாரேனும் அதிகமாக பாராட்டினால் மயங்க வேண்டாம்.
சித்திரை 1,2: நல்லவர், கெட்டவர் யாரென்று ஆராய்ந்து நட்புக் கொள்ளுங்கள்.
துலாம்:
சித்திரை 3,4: நல்ல காலம் வந்துவிட்டதற்கான அடையாளங்கள் தெரியும்.
சுவாதி: ஆடை, ஆபரணங்களுக்காக அதிகமாக செலவு செய்வீர்கள்.
விசாகம் 1,2,3: தாயாருக்கும் உங்களுக்கும் சண்டை வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: சுபநிகழ்ச்சி கூடிவரும். ஆசிரியர்களுக்கு நன்மை கூடுதலாகும்.
அனுஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மகிழ்ச்சி கூடும். நட்பு வட்டம் விரிவடையும்.
கேட்டை: சிறு ஓய்வு எடுக்க மனம் விரும்பினாலும் உழைக்க வேண்டி வரும்.
தனுசு:
மூலம்: உறவினர் ஆதரவால் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்
பூராடம்: தள்ளிப் போய்க்கொண்டிருந்த நல்ல விஷயம் இன்று உறுதியாகும்.
உத்திராடம் 1: இளைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். சேமிப்பில் ஆர்வம் கூடும்
மகரம்:
உத்திராடம் 2,3,4: கல்விக்காக செலவுகள் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
திருவோணம்: தகுந்த நேரத்தில் செயல்பட்டு ஆரோக்யத்தை பாதுகாத்துக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: பெரியவர்களுக்கு உதவி செய்து அவர்களின் வாழ்த்தைப் பெறுவீர்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: உங்களால் தந்தைக்கும் அவரால் உங்களுக்கும் நன்மை உண்டு.
சதயம்: சிக்கலை ஊகித்து அதிலிருந்து முறையாக மீளுவீர்கள்
பூரட்டாதி 1,2,3: வாக்கினிலே இனிமை கூடுவதால் பணி, தொழில் சிறக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: பரபரப்பான நாள். பயணம் தொடர்பாக இன்று செய்தி வரும்.
உத்திரட்டாதி: பணியிட ரகசியங்களை அவசரப்பட்டு யாரிடமும் பகிர வேண்டாம்.
ரேவதி: சரியான தீர்மானங்களை முறையாக எடுத்து நிம்மதி அடைவீர்கள்.