உங்கள் வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நுழைய எந்த ஒரு தடையும் இருக்காது.
எந்த ஒரு வீடாக இருந்தாலும் நிச்சயமாக அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். மகாலட்சுமி என்பவள் ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிப்பவள் கிடையாது. பல இடங்களுக்கு செல்லக் கூடிய இந்த மகாலட்சுமி தேவியை தினம்தோறும் நிரந்தரமாக நம் வீட்டிற்குள் வரவழைக்க ஆன்மீக ரீதியாக நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும், அதில் ஒரு சுலபமான சக்திவாய்ந்த பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
வெற்றிலைக்கு உண்டான மகத்துவம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. வெற்றிலையை வைத்து நாம் செய்யும் வழிபாடும் சரி, பரிகாரமும் சரி, நமக்கு நிச்சயமாக வெற்றியை கொடுக்கும். அந்த நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.
ஒரு சிறிய கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளரில் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் ஒரே ஒரு வெற்றிலையை போடவேண்டும். ஒரே ஒரு கொட்டை பாக்கையும் அந்த தண்ணீரில் போட்டுக்கொள்ளுங்கள். கொட்டைப்பாக்கு தண்ணீரில் கரைய தான் செய்யும். தண்ணீரின் நிறம் சிவந்த நிறமாக மாற தான் செய்யும் பரவாயில்லை. இந்த சிவப்பு நிற தண்ணீரும், பச்சை நிற வெற்றிலையும் உங்கள் நில வாசலிலை எப்போதும் மங்களகரமாக வைத்திருக்கும். வெற்றிலை தண்ணீர் இருப்பதால் ஒரு வாரத்திற்கு கெட்டுப் போகாது.
தினம்தோறும் டம்ளரின் உள்ளே இருக்கும் வெற்றிலை பாக்கை மட்டும் எடுத்துவிட்டு, டம்ளரில் இருக்கும் தண்ணீரை மட்டும் செடிக்கு ஊற்றி விட்டு, அல்லது கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு டம்ளரில் புது தண்ணீரை நிரப்பி, மீண்டும் அதே பழைய வெற்றிகளை பாக்கை புதிய தண்ணீரில் போட்டுக் கொள்ளலாம். செருப்பு ஸ்டான்ட் பக்கத்தில் எல்லாம் இந்த டம்ளரை வைக்காதீர்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் இந்த டம்ளருக்கு உள்ளே இருக்கும் வெற்றிலையையும் பாக்கை மாற்றினால் மட்டுமே போதுமானது.
வெற்றிலையால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஒரு கண்ணாடி டம்ளர் உங்களுடைய வீட்டு நிலை வாசலில் நிலைத்திருந்தால், மகாலட்சுமி தேவி சந்தோஷமாக தினமும் உங்கள் வீட்டுக்கு வருகை தருவார்கள். வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாது. வயிற்றெரிச்சல் பொறாமை குணம் கொண்டவர்கள் வீட்டிற்குள் நுழையும்போது அவர்களுடைய எதிர்மறை ஆற்றலை இந்த டம்ளரில் இருக்கும் தண்ணீர் வெற்றிலைப்பாக்கு எடுத்துக்கொள்ளும். முயற்சி செய்து பாருங்கள்.
இதேபோல் வெற்றிலையை பற்றி இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை. பெரும்பாலும் கடைகளில் நமக்கு இந்த இரண்டு வெற்றிலைகளும் சேர்ந்துதான் கிடைக்கும். இருப்பினும் நம்முடைய பூஜைக்கு பெண் வெற்றிலையை பயன்படுத்தினால் அது மிகமிக நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.
உங்களால் முடிந்தால் வெற்றிலை பாக்கு கடையிலிருந்து, வெற்றிலை பாக்கு பழம் வாங்கும்போது இந்த வித்தியாசத்தை பார்த்து வாங்கி கொண்டு வந்து பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது வீட்டிற்கு மேலும் லட்சுமி கடாட்சத்தை சேர்க்கும்.
வீட்டில் தேவையில்லாமல் வெற்றிலையை வாட விடக்கூடாது. வெற்றிலையை கிழிக்க இருக்கக்கூடாது. அது நம் வீட்டிற்கு பெருத்த கஷ்டத்தையும் நஷ்டத்தையும் கொண்டு வந்து சேர்த்துவிடும். அதேசமயம் வெற்றிலைகளை வாங்கினால் வீணாகப் போகிறது என்ற காரணத்தினால் பூஜை செய்யும் போது வெற்றிலை பாக்கு வைக்கும் பழக்கத்தை மட்டும் தவிர்த்து விடாதீர்கள்.
பூஜைக்குப் பயன்படுத்திய வெற்றிலையாக இருந்தாலும் அதை முதியவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். ஆடு மாடுகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். பூஜையில் வெற்றிலை பாக்கு இல்லை என்றால், நீங்கள் செய்யும் அந்த பூஜை முழுமையாக நிறைவடையாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.