16.11.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
16.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: புது வகை முயற்சி ஒன்றில் வெற்றி இலக்கை எட்டுவீர்கள்.
பரணி: நினைத்ததை உரிய நேரத்தில் செய்து முடித்து நிம்மதி காண்பீர்கள்.
கார்த்திகை 1: குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற சேமிப்பு உதவும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: குழந்தைளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
ரோகிணி: உடனுக்குடன் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிடம் 1,2: விழிப்புடன் செயல்பட்டு அபாயத்தில் இருந்து தப்பிப்பீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: வீடு, ஃப்ளாட் சம்பந்தமாக எடுத்த முயற்சி நன்மை தரும்.
திருவாதிரை: குடும்பத்தில் ஒருவருக்கு சிரமம் தந்து கொண்டிருந்த பிரச்னை அகலும்.
புனர்பூசம் 1,2,3: எதிலும் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு அநாவசியப் பயம் ஏற்படலாம்.

கடகம்: 
புனர்பூசம் 4: தொழிலில் இருந்த தேக்கநிலை மாறும். தாயின் சிரமம் தீரும்.
பூசம்: பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும்.
ஆயில்யம்: குழந்தைகளின் வெளிநாட்டு முயற்சி வெற்றி அடைந்து மகிழ்விக்கும்.

சிம்மம்: 
மகம்: பொருளாதார நிலை உயரும். முயற்சிகளில் வெற்றி உண்டு.
பூரம்: இன்று சரியாக திட்டமிட்டுச் செய்யும் விஷயம் மட்டுமே வெற்றி பெறும்.
உத்திரம் 1: சிலரது செயல்கள் உங்களின் கோபத்தை துாண்டும்படியாக இருக்கலாம்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உணர்ச்சி வசப்படாமல் நிதானமாகச் செயல்பட்டால் நிம்மதி உண்டு.
அஸ்தம்: பண உதவி கிடைக்கும். இன்று அதிக வேலை பார்க்க வேண்டி வரும்
சித்திரை 1,2: குடும்பத்தினரால் மனநிறைவு ஏற்படும். திட்டம் விரைவாக நடக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: பணியாளர்கள் ஆயுதங்களை கையாளும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி: தாய்வழி உறவினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும்.
விசாகம் 1,2,3: வாகனம், வீடு வாங்கும் முயற்சி இன்று வேகம் பிடிக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: புதிய வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டும் நாள். வளர்ச்சி கூடும்.
அனுஷம்: கூடுதல் பணிச்சுமை காரணமாக சிறு சோர்வு உண்டாகும்.
கேட்டை: குழந்தைகளின் செயலால் பெருமிதமும், முன்னேற்றமும் ஏற்படும்.

தனுசு: 
மூலம் தடைகள் அகலும். சிலருக்கு தேவையற்ற அலைச்சல் உண்டாகலாம்.
பூராடம்: வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். உடல்நலம் மேம்படும்.
உத்திராடம் 1: குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். சிலர் உணர்ச்சிவசப்படுவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். முன்னேற்றம் உண்டு.
திருவோணம்: நண்பர்களிடம் மனம் திறந்து பேசி அவர்களின் அன்பை பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொள்வீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: யோகமான நாள். முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.
சதயம்: நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு செயலை இன்று செய்து முடிப்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: செலவுகள் ஏற்படலாம். பிரச்னைகள் மெல்ல அகலும்.

மீனம்: 
பூரட்டாதி 4: சகபணியாளர்களின் ஒத்துழைப்பு முன்பைவிட அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: உங்களது வாழ்வில் முன்னேற்றமான சூழ்நிலை தென்படும்.
ரேவதி: குழந்தைகளின் செயல்கள் உங்களைப் பெருமைபட வைக்கும்.