17.11.2021 இன்றைய ராசி பலன்

#Astrology
Keerthi
2 years ago
17.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நம்பியவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பண வரவு உண்டு.
பரணி: நிதி வளர்ச்சி பற்றி இருந்த பயங்கள் அகலும். சிந்தனைகள் கூடும்
கார்த்திகை 1: காரணமே இல்லாமல் மனதில் சந்தோஷம் குடிகொள்ளும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். நண்பர்களை சந்திப்பீர்கள்.
ரோகிணி: உடல்நலம் மேம்படும். பலரை சந்தித்து உற்சாகம் அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: மனதில் இருந்து வந்த பயங்கள் அகலும். நிம்மதி மீளும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: சங்கடங்கள் நீங்கும். எதிர்பாராத விரயங்கள் குறையும்.
திருவாதிரை: கவலைகள் குறையும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும்.
புனர்பூசம் 1,2,3: வெளியூர், வெளிநாட்டு பயணங்களைப் பற்றித் திட்டமிடுவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: புதிய பொருள் வாங்குவது பற்றிய எண்ணம் நிறைவேறும்.
பூசம்: கடன் பிரச்னை பற்றி குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
ஆயில்யம்: குழந்தைகளின் வாழ்வு மேம்படும். குடும்ப விழா களைகட்டும்.

சிம்மம்: 
மகம்: நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். கற்பனை பயம் இருக்கும்.
பூரம்: பணியாளர்களுக்கு விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் 1: புதிய நபர்களிடம் பழகும்போது சற்று கவனமாக இருங்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உடல் நலனுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.
அஸ்தம்: அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
சித்திரை 1,2: பேச்சினால் வம்பில் மாட்டாமல் கவனமாக விலகுவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: பணியிடத்தில் உங்களின் புகழ் கூடும். இனிய செய்தி ஒன்று வரும்.
சுவாதி: உறவினரைத் தொடர்பு கொள்வதால் நன்மை நடைபெறும்.
விசாகம் 1,2,3: வேலைகள் விரைந்து முடியும். பலநாள் ஆசை ஒன்று நிறைவேறும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: கல்வி பற்றிய திட்டம் வெற்றி பெறும். கடன் பிரச்னை தீரும்.
அனுஷம்: குழந்தைகள் உங்கள் நலனில் ஆர்வம் காட்டுவார்கள்
கேட்டை: உற்சாகத்தை அதிகரிக்கும் சம்பவங்கள் இன்று நடைபெறும்.

தனுசு: 
மூலம்: அனுபவம் மிக்கவரின் ஆலோசனை கிடைக்கும். வாழ்வு மேம்படும்.
பூராடம்: நினைத்தது நிறைவேறும். பணியிடத்தில் இருந்த போட்டி விலகும்.
உத்திராடம் 1: நண்பர்களின் உதவி பயன்மிக்கதாக இருக்கும். விருந்தில் பங்கேற்பீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பழைய வாகனத்தை மாற்றிப் புதிதாக வாங்க வாய்ப்புள்ளது.
திருவோணம்: வரவு, செலவு ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் சந்தோஷம் உண்டு.
அவிட்டம் 1,2: புதிய ஆடை, நகைகள் வாங்கும் முயற்சி இன்று நிறைவேறும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4 பழைய தவறுகளுக்கு வருந்தி உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
சதயம்: மின்னணு சாதனம் ஒன்றை வாங்கி சந்தோஷப்படுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: சுப முயற்சிகள் தள்ளிப்போவது பற்றி கவலைப்பட வேண்டாம்.
உத்திரட்டாதி: பணி பற்றி இருந்து வந்த மனக்குழப்பம் தீரும். நட்பு வட்டம் விரியும்.
ரேவதி: நண்பர்களால் நல்ல விஷயம் ஒன்று நடைபெற்று உங்களை மகிழ்விக்கும்.