18.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
பரணி: பலர் பாராட்டும் செயல் ஒன்றைச் செய்து பெருமிதம் அடைவீர்கள்.
கார்த்திகை 1: எடுத்த விஷயம் ஒன்று சிறு தடைகளுக்குப் பிறகு நிறைவேறும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வாகனத்தைச் சீரமைப்பீர்கள். மகிழ்விக்கும் செய்தி உண்டு.
ரோகிணி: பணியாளர்களுக்கு நல்ல செய்தி உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பதற்றமான நிலை மாறும். கோபத்தை கட்டுப்படுத்துவீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: சகபணியாளர்கள் தந்த சிறு தொல்லைகள் நீங்கும்.
திருவாதிரை: இளைஞர்கள் வாழ்வில் உயர்வதற்கான வழியைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்கள் முனைப்புடன் உழைத்துப் பாராட்டுப் பெறுவீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: சம்பள உயர்வு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பூசம்: உற்ற நண்பர்களுடன் சிறு கருத்து வேற்றுமை ஏற்பட்டுச் சரியாகும்.
ஆயில்யம்: பணியில் இருந்த பிரச்னை நீங்கும். பொறுப்பை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
மகம் மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
பூரம்: உங்களது பேச்சிற்கு மதிப்பு கூடும். நெருக்கமானவருக்கு நன்மை வரும்.
உத்திரம் 1: உங்களின் செயல்பாடுகள் குடும்பத்தில் குதுாகலத்தை தரப்போகிறது.
கன்னி:
உத்திரம் 2,3,4: பணியாளர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். பண வரவு தேடி வரும்.
அஸ்தம்: நீண்ட நாளாக இருந்து வந்த மனஅழுத்தும் தீரும். நட்பு வட்டம் விரியும்.
சித்திரை 1,2: உங்களது பணியிலும், தாயின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
துலாம்:
சித்திரை 3,4: உங்களது கவனக்குறைவால் யாரையும் பகைக்க வேண்டாம்.
சுவாதி: சகோதரர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
விசாகம் 1,2,3: உங்களுக்குள்ள தனித் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சிகம்:
விசாகம் 4: பயணம் முடிவாகும். இடமாற்றம், பணி மாற்றம் வரலாம்.
அனுஷம்: பணியிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். முயற்சி கைகூடும்.
கேட்டை: உங்களின் புகழ் கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும்.
தனுசு:
மூலம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை அகலும். தாய்க்கு உயர்வு வரும்.
பூராடம்: மகிழ்ச்சி உண்டு. மதியம் நல்ல செய்தி ஒன்று வரும்.
உத்திராடம் 1: பிறருடன் மனம் விட்டுப் பேசி சில பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: விருப்பப்படி விஷயங்களை முடிக்கும் பிடிவாதம் உங்களுக்கு வரும்.
திருவோணம்: உங்களுக்கு தொல்லை தந்த எதிரியின் பலம் குறைந்து நிம்மதி வரும்.
அவிட்டம் 1,2: புது விஷயத்தில் ஈடுபாடு வரும். தந்தையின் பரிவு கூடும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திடீர்ப் பயணம் உண்டாகும்.
சதயம்: எதிலும் அவசரம், பதற்றம் வேண்டாம். கலகலப்பான நாள்.
பூரட்டாதி 1,2,3: பணவரவு இருக்கும். படிப்படியாக முன்னேற ஆரம்பிப்பீர்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
உத்திரட்டாதி: குடும்ப முன்னேற்றம் கருதி செய்த செலவுக்குப் பலன் உண்டு.
ரேவதி: காலை நேரத்திலேயே மனம் நிறையும் செய்திகள் வந்து சேரும்