தஞ்சாவூர் ஸ்டைல் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
#Cooking
Mugunthan Mugunthan
3 years ago
தேவையான பொருட்கள்:
- மட்டன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 2 (நறுக்கியது)
- மிளகு - 1 டீஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கிராம்பு - 4
- பட்டை - 1 இன்ச் துண்டு
- துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
- தக்காளி - 3 (நறுக்கியது)
- சீரகம் - 1 டீஸ்பூன்
- அன்னாசிப் பூ - 1
- கறிவேப்பிலை - சிறிது
- மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 5-6
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய மட்டனை குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், நறுக்கிய 1 வெங்காயம், நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, 2 டம்ளர் நீரை ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி,
- மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மல்லித் தூளையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு தேங்காய் மற்றும் சிறிது சோம்பு விதைகளை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.