19.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: கவலைகள் மறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பரணி: நிதி முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்யம் பற்றிய கவலை தீரும்.
கார்த்திகை 1: பெற்றோர் உடல்நலனில் இருந்த சிரமங்கள் குறையும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டு.
ரோகிணி: தேவையின்றி யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.
மிருகசீரிடம்1,2: குடும்பத்தில் புதிய உறவுகள் வர வாய்ப்பு உள்ளது.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: கவலைகள் தீரும். சிலருக்கு காதல் உணர்வு அதிகரிக்கும்.
திருவாதிரை: பேசும் போது கவனம் தேவை. முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் 1,2,3: பணியிடக் கவலை தீரும். பலநாள் கனவு ஒன்று நிறைவேறும்.
கடகம்:
புனர்பூசம் 4: வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம்: பெரியவர்களின் ஆசியும், அன்பும் கிடைக்கும். கலகலப்பான நாள்.
ஆயில்யம்: பிறருக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். அமைதியான நாள்.
சிம்மம்:
மகம்: கடந்த கால வருத்தங்களை நினைக்காமல் அவற்றை விலக்குவது நல்லது.
பூரம்: மனச்சாட்சிப்படி நடப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். நிம்மதியான நாள்.
உத்திரம் 1: எதையும் ஆராயாமல் ஏற்க வேண்டாம். உறவுகளை சந்திப்பீர்கள்.
கன்னி:
உத்திரம் 2,3,4: யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
அஸ்தம்: நிதிநிலை உயர்வதற்காக நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சித்திரை 1,2: பகையொன்று நட்பாகும். வீட்டில் கலகலப்பு அதிகரிக்கும்.
துலாம்:
சித்திரை 3,4: நேற்றிருந்த கவலை ஒன்று முற்றிலும் தீரும். நட்பு வளரும்.
சுவாதி: வாக்குவாதத்தால் தொல்லை வராதபடி கவனமாக இருங்கள்.
விசாகம் 1,2,3: வீட்டில் புதிய பொருள் சேர்வதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: பணியாளர்கள் பின்விளைவுகளை அறிந்து செயல்படுவது நல்லது.
அனுஷம்: புதிதாக அறிமுகமாகும் நபர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
கேட்டை: மகிழ்ச்சியான நாள். உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்.
தனுசு:
மூலம்: நல்லவர்களை பகைத்து கொள்வது தப்பு என்பதை உணர்வீர்கள்
பூராடம்: நீங்கள் எண்ணிய விஷயங்கள் இன்று சிறப்பாக நடைபெறும்.
உத்திராடம் 1: பொறுப்பு ஒன்றை நல்ல முறையில் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
திருவோணம்: மனநிம்மதி கூடும். குடும்ப சச்சரவில் அமைதி தேவை.
அவிட்டம் 1,2: நெருக்கமானவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: குழந்தைகளின் வாழ்வில் செழிப்பான மாற்றம் உண்டு.
சதயம்: மற்றவர்களின் மனம் நோகக்கூடாது என்ற கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: திடீர் அதிர்ஷ்டம் உங்களை திக்குமுக்காட வைக்கும். கலகலப்பான நாள்.
மீனம்:
பூரட்டாதி 4: குதுாகலம் அளிக்கும் விஷயம் ஒன்று இன்று நடக்கும்.
உத்திரட்டாதி: நட்பு வட்டம் விரிவடையும். சகோதரர்களின் மூலம் உதவி கிடைக்கும்.
ரேவதி: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஒருவரின் சிறப்பு அதிகரிக்கும்.