இன்று 19-11-2021அனைத்துலக ஆண்கள் நாள்

#history #International
இன்று 19-11-2021அனைத்துலக ஆண்கள் நாள்

சர்வதேச ஆண்கள் தினம்( International Men's Day )  19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு,
பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது.

யுனெஸ்கோ சார்பாக பேசிய, பெண்கள் மற்றும் சமாதான கலாச்சார இயக்குனர் "இது ஒரு சிறப்பான சிந்தனையும், சில பால் சமத்துவத்தினை வழங்கக்கூடியதுமாகும்" எனத்தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் யுனெஸ்கோ ஒழுங்குபடுத்துனர்களுடன் இது தொடர்பில் ஒத்துழைப்புச் செய்ய எதிர்பார்க்கிறது எனவும் தெரிவித்தார்.

ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகில் ஆண்களைக்
கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு
கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.
“ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும்?” என்னும் கேள்வி
இன்னும் சிலருக்கு எழுகிறது.

அதை சிலர் கேலி வேறு செய்கிறார்கள் – “ஆண்களுக்கென்ன கேடு, தனியாக ஒரு நாள் வேறு ஒன்று
தேவையா?” – என்று! ஏன் அப்படி? அனைத்து சிறப்புக்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது.

ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை நம்
சமூகம் அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

இந்த ஆண்கள் தினத்தை அனுசரிக்கும் நோக்கங்களில் சில: ஆண்கள் மற்றும் இளைஞர்களின்
சுகாதார மேம்பாடு, ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் மனமொருமித்த செயல்பாடு
போன்றவற்றை வேண்டுவது, ஆணினத்தின் வழி காட்டுதலுக்கு நேர்மையும், மனத்திண்மையும் ஒருங்கே கொண்ட முன் மதிரிகளை அடையாளம் காண்பது அனைத்துத் துறைகளிலும்
கடினமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பல இடர்களுக்கு மத்தியில்
முழுமையான அர்ப்பணிப்புடன் பணி புரிந்துவரும் ஆணினத்தின் சாதனைகளை அடையாளம் கண்டு அதற்கு நியாயமாகக் கிட்டவேண்டிய அங்கீகாரத்தை சமுதாயத்திலிருந்து பெறுதல்
வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின்
அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படுகிறான் (the role of a
protector and provider).

அதுதான் ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆணின் இந்த மிக முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை. இந்த அடிப்படை மனப்பான்மையின் நீட்சியாகத்தான் தன்னை விட்டு வெளியேறிய முன்னாள் மனைவிக்கும்
பராமறிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன் கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்கு அவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும் அமைகின்றன!

இத்தகைய தவறான போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும்நாளாக இந்த ஆண்கள் தினம்
அமைகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4