20.11.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
20.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நெருங்கியவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
பரணி: விரதம், வழிபாடுகளில் ஈடுபாடு கூடும். சிறப்பான விருது வரும்.
கார்த்திகை 1 :உறவினர்களுடன் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பரபரப்பான நாள். பணி பற்றிய திட்டம் நிறைவேறும்.
ரோகிணி: உங்களது முயற்சியால் போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்டம் அடிக்கும்.
மிருகசீரிடம் 1,2: உடல்நலத்தில் கவனம் செலுத்தி நலம் அடைவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: விரும்பிய விஷயம் நடக்கும். கவலை ஒன்று தீரும்.
திருவாதிரை: புது உத்வேகத்துடன் செயல்பட்டுப் பாராட்டுப் பெறுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: இன்று பணி பற்றிய நல்ல செய்தி வரலாம். மகிழ்ச்சி கூடும்.
பூசம்: சந்தோஷ அனுபவங்கள் ஏற்படும். ஆன்மிகப் பெரியோரைச் சந்திப்பீர்கள்.
ஆயில்யம்: தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த வீட்டு வேலை ஒன்றை முடிப்பீர்கள்.

சிம்மம்: 
மகம்: குடும்பத்தில் ஒருவருக்கு வெளிநாட்டுப் பணிக்கு அழைப்பு வரும்.
பூரம்: உங்களது முயற்சியால் மற்றவர்களின் பிரச்னை தீரும்.
உத்திரம் 1: குழந்தைகளால் மகிழ்ச்சி வரும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: குழந்தைகளுக்காக அலைந்து திரிந்த பிறகே பலன் கிடைக்கும்
அஸ்தம்: பழைய விஷயம் ஒன்றைத் தெரிவிக்கும் நபரைச் சந்திப்பீர்கள்.
சித்திரை 1,2: மன நிறைவான நாள். பிறருக்கு நன்மை செய்து மகிழ்வீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: ஆரோக்யம் பற்றிய பல நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சுவாதி: குழந்தைகளின் மீது அதிக நம்பிக்கை வைத்தது வீண் போகாது.
விசாகம் 1,2,3: வெற்றி மீதுள்ள ஆசையால் தவறான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சுற்றியிருப்போர் உங்களைக் குழப்ப அனுமதிக்க வேண்டாம்.
அனுஷம்: குடும்பத்தினர் மீது அதிக கண்டிப்பைத் திணிக்க வேண்டாம்.
கேட்டை: கடந்த நாட்களில் பகையானவர்கள் வலிய வந்து நட்பாவார்கள்.

தனுசு: 
மூலம்: பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். நட்பு வட்டம் வரிவடையும்.
பூராடம்: பல காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நன்மை கைகூடும்.
உத்திராடம் 1: இழந்த அமைதி மீளும். மற்றவர் பிரச்னை ஒன்றைத் தீர்ப்பீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: சிறுகச் சிறுகச் சேமித்த தொகை இன்று உங்களுக்கு கைகொடுக்கும்.
திருவோணம்: குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்த விதம் பெருமை சேர்க்கும்.
அவிட்டம் 1,2: வெளிநாட்டு வாய்ப்பு வரும். கலைகளில் ஆர்வம் ஏற்படும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: மனம் மகிழும் நாள். பணியில் புதிய உத்திகள் தோன்றும்.
சதயம்: எதிலும் நிதானப்போக்கு இருந்தாலும் மனதில் நிம்மதி உண்டு.
பூரட்டாதி 1,2,3: இன்று அவசரமாக வேலைகளை முடிக்க வேண்டி வரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: மதியத்திற்கு மேல் குழப்பங்கள் நீங்கும்படியான செய்தி வரும்.
உத்திரட்டாதி: நண்பர்களால் சந்தோஷம் அளிக்கும் விஷயம் ஒன்று நடக்கும்.
ரேவதி: சுய திறமைகள் வெளிப்படுவதால் வெற்றியும், பாராட்டும் உண்டு.