நடிகை ஷாலினி அஜீத் பிறந்த நாள் 20-11-2021

#TamilCinema
நடிகை ஷாலினி அஜீத் பிறந்த நாள் 20-11-2021

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் விஜய், அஜீத், பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடது பிறந்தநாளை ன் நடித்தபின்னர் நடிகர் அஜீத்தை காதல் திருமணம் செய்து கொண்ட ஷாலினி அஜீத், இன்று தனது 40 வகொண்டாடுகிறார். அவருக்கு நண்பர்களும், திரையுலகினர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.
 
ஷாலினி தனது நான்காவது வயதிலேயே மலையளப்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவருடைய கவனத்தையும் கவர்ந்தார்.
 
பின்னர் சில வருடங்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 1997ஆம் ஆண்டு பாசில் இயக்கிய 'காதலுக்கு மரியாதை' படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக ஹீரோயினியாக நடித்தார். அந்த படத்தின் அபார வெற்றி அவருக்கு வாய்ப்புகளை குவித்தது. அஜீத்துடன் அமர்க்களம், விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு, மாதவனுடன் அலைபாயுதே, பிரசாந்த்துடன் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் அஜீத்துடன் காதல் மலர்ந்து அவரை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உண்டு.
 
மேலும் தங்கள் மகள் அனோஷ்கா குறித்து ஷாலினி பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்.
 
அவர் கூறியதாவது :
 
அஜீத்துக்கு, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை இன்முகத்துடன் வரவேற்கும் குணம் இயற்கையிலேயே உண்டு என்றும், அதே குணம் எங்கள் மகளுக்கும் இருக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். வீட்டுக்கு யார் வந்தாலும், அனோஷ்கா 'வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி'ன்னு கூப்பிட்டு நலம் விசாரிப்பா. பிறரை மதிக்கும் பழக்கத்தை முதலில் குழந்தைகளிடத்தில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் மிகவும் உறுதியாக இருந்தோம்.

மேலும் அனோஷ்காவுக்கு சின்ன வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கற்றுத்தந்துள்ளோம். மேலும் மத்தவங்களுக்கு உதவுவதில் அஜீத் கணக்கு பார்த்ததே இல்லை. இந்த அபூர்வ குணம் அப்படியே அனோஷ்காவிடம் இயற்கையாகவே உள்ளதை எண்ணி தான் மிகவும் பெருமைப்படுவதாக ஷாலினி அஜீத் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!