21.11.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
21.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: சந்தோஷ செய்திகள் வந்து மகிழ்ச்சி தரும். சுறுசுறுப்பு கூடும்.
பரணி: வியாபாரிகளுக்கு பண வரவு அதிகரிக்கும். மகிழ்ச்சி கூடும்.
கார்த்திகை 1: உடன்பிறந்தோர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி முடிவாகும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: நண்பர் வீட்டில் சுபநிகழ்வு நடக்கத் துணையாக இருப்பீர்கள்.
ரோகிணி: புதிய விஷயங்கள் கற்கும் திறன் உங்களிடம் அருமையாக இருக்கும்.
மிருகசீரிடம் 1,2: பணியாளர்களுக்குத் தொழில் செய்யும் எண்ணம் வரும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உங்களின் சாதனைக்கு பாராட்டு கிடைக்கும். திருப்தியான நாள்
திருவாதிரை: குடும்பம் மகிழும். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறும்.
புனர்பூசம் 1,2,3: கலைத்துறையினர் வாய்ப்புகள் பெற்று வளம் அடைவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: கடந்த நாட்களின் வருத்தம் தீரும். வியாபாரத்தில் வரவு உயரும்.
பூசம்: உறவினர் சந்திப்பால் நன்மை ஒன்று நிகழும். சிலர் தந்த சிரமம் தீரும்.
ஆயில்யம்: எதிர்பாராத வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.

சிம்மம்: 
மகம்: தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும்.
பூரம்: பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை தேட இது உகந்த நேரம்.
உத்திரம் 1: செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். பயம் நீங்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: முக்கியமான சில நபர்களை சந்தித்து நலம் அடைவீர்கள்.
அஸ்தம்: ஆன்மிகத்தில் நாட்டம் வரும். கவலை ஒன்று நீங்கும்.
சித்திரை 1,2: பணியில் திருப்தி உண்டாகும். உங்களின் கனவு நனவாகும்.

துலாம்: 
சித்திரை 3,4: குடும்ப விவகாரங்களில் நல்ல மாற்றம் உண்டாகும்.
சுவாதி: பணியாளர்கள் பாராட்டு பெறுவீர்கள். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
விசாகம் 1,2,3: வெளிநாட்டு வாய்ப்பு பற்றி நல்ல செய்திகளை பெறுவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சுபநிகழ்ச்சிகள் நடக்கலாம். நேற்றைய மனஅழுத்தம் தீரும்.
அனுஷம்: மனதில் நினைப்பதை யாரிடமும் வெளிப்படையாக கூற வேண்டாம்.
கேட்டை: மற்றவரைச் சரியாக எடை போடுவீர்கள். உழைப்பால் மேன்மை உண்டு.

தனுசு: 
மூலம்: சுபநிகழ்ச்சிகள் நிறைந்த நாள். பொறுமையைக் கடைப்பிடிப்பீர்கள்.
பூராடம்: உங்களது ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
உத்திராடம் 1: நண்பர் ஒருவர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டு.
திருவோணம்: சிறு சிறு பிரச்னைகளைச் சந்தித்து அதிலிருந்து மீண்டுவிடுவீர்கள்.
அவிட்டம் 1,2: சொத்து வாங்கும்போது கவனத்துடன் ஆராய்ந்து வாங்குங்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: தொழிலில் நல்ல லாபம் வரும். உங்களின் பல நாள் ஆசை நிறைவேறும்.
சதயம்: சுபச்செலவு உண்டு. நிதி விரிவாக்கத்தில் ஆர்வம் ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு பாராட்டால் பெருமிதம் அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: திடீர் சலிப்பு வந்து இன்றே சரியாகிவிடும். சிறு பயணம் உண்டு.
உத்திரட்டாதி: குழந்தைகளால் நெடுநாளைய கவலை ஒன்று தீரும்.
ரேவதி: மேலதிகாரிகளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். சிறிய சாதனை செய்வீர்கள்.