22.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: உறவினர்களது செயலால் மனதில் சிறியதொரு திருப்தி வரும்.
பரணி: சமாளிக்கும்படியான சிறிய செலவு ஒன்று ஏற்படக்கூடும்.
கார்த்திகை 1: மனதுக்கு பிரியமானவருடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: அலுவலக பணியை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள்.
ரோகிணி: இன்று வரும் செய்தி மனதின் சங்கடம் ஒன்றைத் தீர்க்கும்.
மிருகசீரிடம் 1,2: பணியிடத்தில் முன்பு இருந்த தாழ்வு மனப்பான்மை தீரும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: உங்களது முயற்சியால் உறவினர் ஒற்றுமை மேம்படும்.
திருவாதிரை: உங்களின் எண்ணங்களை வெளியிட இன்று உகந்த நாள் அல்ல.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: வீட்டில் உள்ள ஒருவருக்கு திருமண முயற்சி துவங்கும்.
பூசம்: பிள்ளைகள், பேரன், பேத்தி மூலம் சந்தோஷ செலவு உண்டாகும்.
ஆயில்யம்: எப்போதோ நீங்கள் எடுத்த முயற்சி இன்று எதிர்பார்த்த வெற்றி தரும்.
சிம்மம்:
மகம்: உங்களின் நியாயத்தன்மை காரணமாக நல்ல பெயர் எடுப்பீர்கள்.
பூரம்: கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். உங்களது பேச்சுக்கு மதிப்பிருக்கும்.
உத்திரம் 1: பெண்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். பயம் ஒன்று நீங்கும்
கன்னி:
உத்திரம் 2,3,4: உழைப்பை அதிகரிப்பதன் மூலம் நன்மை அடைவீர்கள்.
அஸ்தம்: சிறு சிறு தடைகள் வரும். எதையும் முயன்றே முடிக்க முடியும்.
சித்திரை 1,2: மற்றவர் செயலில் தலையிட வேண்டாம். கவனம் தேவை.
துலாம்:
சித்திரை 3,4: தடைபட்ட நல்ல விஷயம் உங்களது முயற்சியால் கைகூடும்.
சுவாதி: பல காலமாக அனுபவித்து வந்த சிறு சிரமங்களில் இருந்து மீளுவீர்கள்.
விசாகம் 1,2,3: இன்று ஏற்படும் சிறு சிறு தாமதங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
விருச்சிகம்:
விசாகம் 4: மற்றவர்கள் வம்பு பேசும்போது அவர்களை புறக்கணியுங்கள்.
அனுஷம்: உங்களது செயலால் சிறு சங்கடங்களுக்கு ஆளாகி மீளுவீர்கள்.
கேட்டை: பேச்சில் கவனமாக இருப்போருக்கு இன்று பிரச்னையே வராது.
தனுசு:
மூலம்: எதிலும் அலட்சியப்போக்கு வேண்டாம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
பூராடம்: யோகமான நாள். தாமதம் ஏற்படுவது பற்றி கவலைப்பட வேண்டாம்.
உத்திராடம் 1: புது வாய்ப்பு வரும். மற்றவர்களின் பிரச்னையை தீர்ப்பீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஓய்வின்றி உழைப்பீர்கள்.
திருவோணம்: கலகலப்பான நாள். தன்னம்பிக்கை இழக்க வேண்டாம்.
அவிட்டம் 1,2: ஒரே சமயத்தில் பல வேலைளை கவனிக்க வேண்டி வரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: உங்களது திறமை காரணமாக எதிலும் நன்மை காண்பீர்கள்.
சதயம்: தந்தைக்கு மகிழ்ச்சி கூடும்படியான நிகழ்வுகள் நடக்கும்.
பூரட்டாதி 1,2,3: நண்பர் ஒருவருக்காக அலைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு.
மீனம்:
பூரட்டாதி 4: முயற்சி ஒன்றில் வெற்றி பெறுவீர்கள். பரபரப்பு கூடும்.
உத்திரட்டாதி: உங்களின் பழக்கத்தை மாற்றிக் கொள்ளும்படியான திருப்பம் வரும்.
ரேவதி: உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். சமீபத்தில் ஏற்பட்ட தொல்லை ஒன்று நீங்கும்.