சமூகத்தை இழிவுபடுத்திய நடிகை மீது வழக்குப் பதிவு!(லங்கா4.கொம் / Lanka4.com)

Prabha Praneetha
4 years ago
சமூகத்தை இழிவுபடுத்திய நடிகை மீது வழக்குப் பதிவு!(லங்கா4.கொம் / Lanka4.com)

சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகப் பதிவில் பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை காவல் துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு அளித்த புகாரின்பேரில் கங்கனா ரணாவத்துக்கு எதிராக சபர்பன் கர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

பிரிவு 295ஏ வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் சிங் டிஎஸ்ஜிஎம்சி அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

அவரது தலைமையிலான குழு, காவல் துறையிடம் புகார் அளித்தவுடன், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலிப் பாட்டீல் மற்றும் மும்பை காவல் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து கங்கனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4