26.11.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
26.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: ஷேர், கமிஷன், போனஸ் வகைகளால் இன்று பணம் வரும்.
பரணி: மகிழ்ச்சி கூடும். உறவுகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.
கார்த்திகை 1: ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள்

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களின் மனதிடம் அதிகரிக்கும்
ரோகிணி: குடும்ப வருமானம் உயரும். பிறரிடம் நன்றி உணர்வை எதிர்பார்க்க வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உற்சாகம் உயரும். பிரச்னைகள் விலகும். இன்றைய நாள் இனிதாகும்.
திருவாதிரை: மனபாரம் குறையும். பணம் வரும். உங்களின் செல்வாக்கு உயரும்.
புனர்பூசம் 1,2,3: கடன் குறையும். மனதை அரித்து வந்த பிரச்னை தீரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: தொழில், பணியில் அதிக கவனம் தேவை.
பூசம்: வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஆயில்யம்: பொறுப்புடன் செயல்பட்டு பிரச்னையில் இருந்து மீளுவீர்கள்.

சிம்மம்: 
மகம்: குடும்பத்தில் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பூரம்: வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
உத்திரம் 1: தள்ளிப்போன நேர்த்திக்கடனை உடனே முடிப்பீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நீண்ட நாளாக இருந்து வந்த மனஅழுத்தம் தீரும்.
அஸ்தம்: பல வேலைகளை இழுத்து போட்டு செய்து வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
சித்திரை 1,2: தம்பதிகள் தேவையற்ற பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: பயணங்கள் அதிகமானாலும் சலிப்பில்லாத உற்சாகம் உண்டு.
சுவாதி: உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு கூடும்.
விசாகம் 1,2,3: உங்களின் செயல்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உயர்கல்வி, பணியின் பொருட்டு குழந்தைகள் உங்களைப் பிரிவார்கள்
அனுஷம்: சிறு சிறு செலவுகள் இருக்கும். உங்களது வேண்டுதல் நிறைவேறும்.
கேட்டை: திடீர் பணவரவு உண்டு. சகோதரர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்.

தனுசு: 
மூலம்: சிலருடன் நட்பு கொள்ள வேண்டாம் என்று முடிவெடுப்பீர்கள்.
பூராடம்: வீட்டைச் சீரமைப்பதில் செலவு அதிகரிக்கும். நிம்மதி வரும்.
உத்திராடம் 1: பேச்சிலும் செயலிலும் இன்று கவனமாக இருங்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: வீண் பழி வரக்கூடிய நாள் என்பதால் கவனமாக இருங்கள்.
திருவோணம்: தீயோர் ஆலோசனையால் குறுக்கு வழியை நாட வேண்டாம்.
அவிட்டம் 1,2: பணவரவு மனநிறைவளிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: குடும்ப பிரச்னைகள் சீராகும். வேலைச்சுமை அதிகரிக்கும்.
சதயம்: சகோதரருடன் பனிப்போர் வராமல் தழைந்து போகலாம்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினருடன் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்: 
பூரட்டாதி 4: போட்டிகளில் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திரட்டாதி: துணிச்சலான முடிவுகள் எடுப்பதன் மூலம் நன்மை அடைவீர்கள்.
ரேவதி: பணியிடத்தில் புகழ் பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டு.