ராஜீவ் கொலை தொடர்பாக பேரறிவாளனுக்கு ஆறாவது முறையாகவும் பரோல் நீடிக்கப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக பலர் கிறையில் விடுதலை செய்யபடாமல் பல வருடங்கள் சிறைவாசம் அனுபவிப்பதும், அதை வைத்து பல கட்சிகள் பிழைப்பு நடத்துவதும் அறிந்த விடயம்.
அவர்களுள் அமரர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோல் முடிந்து இன்று சிறைக்கு செல்ல இருந்த நிலையில் அவருக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு ஆறாவது முறையாகவும் நீடிக்கப்பட்டது பரோல்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோல் முடிந்து இன்று சிறைக்கு செல்ல இருந்த நிலையில் அவருக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். சிறுநீரகத் தொற்று மற்றும் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக பரோல் வழங்க வேண்டி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பியிருந்தார். மனுவை பரிசீலித்த முதல்வர் 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 28ஆம் திகதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பலத்த காவலுடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு பலத்த காவலுடன் சென்று கையெழுத்திட்டு வந்தார்.
மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் மீண்டும் பரோல் நீடிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அதன்படி 5 முறை பரோல் நீடிக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் 25) முடிந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட இருந்தார். இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேலும் பரோல் நீடிக்க மனு அனுப்பி இருந்தார்.
அதனை பரிசீலித்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 6ஆவது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிற்க்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த பரோலை அவரது உடல் சுகஜீனதை கருத்தில்க்கொண்டே கொடுக்கப்பட்டதாகவும் இதில் எவ்வித அரசியலும் இல்லை என தமிழ் ஆர்வலர்களில் முக்கியமான நபர் ஒருவர் கூறியிருக்கிறார்.