கனடாவால் கட்டப்பட்டு வரும் பாலத்தை திறக்க விடமாட்டேன் - ட்ரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் புதிய பாலம் திறக்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தையும் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தையும் இணைக்கும் புதிய பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாலத்தில் குறைந்தபட்சம் பாதியையாவது சொந்தமாக்கிக் கொள்ளும் முனைப்பில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.
இதற்கமைய ட்ரம்ப் மேற்படி அச்சுறுத்தலை விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், பாலத்தின் இருபுறமும் கனடாவுக்குச் சொந்தமானது என்றும், அதைக் கட்டுவதற்கு "கிட்டத்தட்ட" எந்த அமெரிக்க தயாரிப்புகளையும் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆகவே அதற்கான இழப்பீட்டை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், அதனை கனடா பெற்றுக்கொள்ளும் வரை பாலத்தை திறக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்