27.11.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
27.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: முயற்சிக்கு ஏற்ற நற்பலன் இருக்கும். பெருமிதம் வரும்.
பரணி: புதிய முயற்சியில் நினைத்த முன்னேற்றம் அடைவீர்கள்.
கார்த்திகை 1: உங்களின் அவசரப் பேச்சினால் சிரமம் ஏற்படாமல் கவனம் தேவை.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: தெளிவுடன் உங்கள் முயற்சியை நிறைவேற்றுவீர்கள்
ரோகிணி: நண்பர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி நன்மை செய்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: அவப்பெயர் ஏற்படுத்திக் கொண்ட நிலை மாறும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: வருமானத்திற்கு குறைவிருக்காது. கவலை தீரும்.
திருவாதிரை: மனதில் தெளிவு ஏற்படுத்தும்படியான நிகழ்ச்சி நடைபெறும்.
புனர்பூசம் 1,2,3: பேச்சுவார்த்தை தீர்வு தரும். பிரச்னை ஒன்று அகலும்.

கடகம்: 
புனர்பூசம் 4: உடல் உபாதை ஒன்று சரியாகும். பெற்றோரின் ஆசி கிடைக்கும்.
பூசம்: உறவினர் ஒருவரால் ஏற்பட்ட மனகாயத்தை அவரே நீக்குவார்.
ஆயில்யம்: குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நண்பருக்கு உதவுவீர்கள்.

சிம்மம்: 
மகம்: உறவினர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்டிருந்த குழப்பம் தீரும்.
பூரம்: உங்களின் முயற்சி நிறைவேற எளிய செயல்களை கைகொள்வீர்கள்.
உத்திரம் 1: பணியிடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள்

கன்னி: 
உத்திரம் 2,3,4: தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். பிறரை அனுசரித்து செல்வீர்கள்.
அஸ்தம்: பேச்சுவார்த்தையில் இருந்து வந்த குழப்பங்கள் இன்று நீங்கும்.
சித்திரை 1,2: பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். மனம் மகிழும்.

துலாம்: 
சித்திரை 3,4: மனம் தெளியும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
சுவாதி: மனதுக்கு நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் 1,2,3: அக்கம்பக்கத்தினரால் இதுவரை ஏற்பட்டு வந்த பிரச்னை தீரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: அதிர்ஷ்டம் உண்டு. சுபநிகழ்ச்சி முயற்சிகள் வெற்றி அடையும்.
அனுஷம்: அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்செய்தி உண்டு.
கேட்டை: பணியிடத்தில் ஏற்பட்டிருந்த நிம்மதியின்மை முடிவுக்கு வரும்.

தனுசு: 
மூலம்: முயற்சியில் இருக்கும் தடைகளை நீக்க நடவடிக்கைகள் எடுப்பீர்கள்.
பூராடம்: புதிய விஷயங்களை கற்றுப் பணியில் சிறப்படைவீர்கள்
உத்திராடம் 1: சொத்துக்கள் தொடர்பான செயல்களில் முன்னேற்றம் உண்டு.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பொருளாதாரத்தில் இருந்து வந்த பின்னடைவு தீரும்.
திருவோணம்: நேற்றைய சிரமங்களில் இருந்து மீண்டு நிம்மதி அடைவீர்கள்.
அவிட்டம் 1,2: வருமானம் போதுமானதாக இருக்கும். பேராசைப்பட வேண்டாம்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: மற்றவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள்.
சதயம்: சிலருக்கு திருமணம் முடிவாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: வேலைப்பளு காரணமாக சோர்ந்தவர்களுக்கு சம்பளம் உயரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: எதிலும் அவசரமாக முடிவெடுக்காமல் கவனமாக இருப்பீர்கள்.
உத்திரட்டாதி: மனதில் தைரியம் கூடுவதால் வாழ்வில் முன்னேறுவீர்கள்.
ரேவதி: எதிர்கால முதலீட்டு எண்ணம் சிலருக்கு உண்டாகலாம்.