28.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: உங்களது பேச்சில் முதிர்ச்சி தெரியும். கலகலப்பான நாள்.
பரணி: செலவாகும் என்று நினைத்த விஷயம் குறைந்த செலவில் முடியும்.
கார்த்திகை 1: உடன்பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும். நல்லவர் நட்பு வரும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: புதிய பொருள் வாங்குவதற்கு இன்று முயற்சி செய்வீர்கள்.
ரோகிணி: உங்களின் துணிச்சலான செயல் மற்றவர்களால் பாராட்டப்படும்.
மிருகசீரிடம் 1,2: கடனில் ஒரு பகுதியை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: இழுபறியாக இருந்து வந்த விஷயம் ஒன்று முடிவடையும்.
திருவாதிரை: தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.
புனர்பூசம் 1,2,3: தாயாருக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: உங்களை பற்றிய உண்மையில்லாத விமர்சனங்களை புறக்கணியுங்கள்.
பூசம்: திருப்பம் ஒன்றால் மனம் மகிழும். உற்சாகமாக வலம் வருவீர்கள்.
ஆயில்யம்: ஏமாந்த தொகை கிடைப்பது பற்றிய செய்தி வரும்.
சிம்மம்:
மகம்: உறவினர்களுடன் இருந்து வந்த பழைய மனக்கசப்புகள் நீங்கும்.
பூரம்: பண நெருக்கடிக்கு தீர்வு காண்பீர்கள். கலகலப்பான நாள்.
உத்திரம் 1: நண்பர்கள் இடையே இருந்த பிரச்னை தீரும். யோகமான நாள்.
கன்னி:
உத்திரம் 2,3,4: பகை கொண்ட நண்பர், அக்கம்பக்கத்தினரிடம் நல்லுறவு வரும்.
அஸ்தம்: வாகனத்தில் செல்லும் போது பாதுகாப்பாக செல்லுங்கள்.
சித்திரை 1,2: பொருட்கள் வாங்கும் போது சரிபார்த்து வாங்குங்கள்.
துலாம்:
சித்திரை 3,4: குழந்தைகள் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்விப்பார்கள்.
சுவாதி: பல காலம் தடைப்பட்ட விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும்.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
விருச்சிகம்:
விசாகம் 4: புது வேலைக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பயம் நீங்கும்.
அனுஷம்: குடும்பத்தில் ஒருவருக்கு நல்ல வாழ்க்கை துணை ஏற்பாடாகும்.
கேட்டை: பிரச்னை ஒன்றை புதிய அணுகுமுறையால் தீர்ப்பீர்கள்
தனுசு:
மூலம்: வாகனத்தை சீர் செய்வீர்கள். சேமிப்பில் ஆர்வம் ஏற்படும்.
பூராடம்: தோல்வி மனப்பான்மையில் இருந்து முழுவதுமாக விடுபடுவீர்கள்.
உத்திராடம் 1: பணவரவு அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். பரபரப்பான நாள்.
திருவோணம்: பணியிட பளுவை குடும்ப நிகழ்வு ஒன்று சரிக்கட்டும்.
அவிட்டம் 1,2: அனைத்து நடவடிக்கைகளிலும் சற்று கவனமாக இருங்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: பேச்சிலும், செயலிலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
சதயம்: உங்களை தவறான வழியில் ஈடுபடுத்துவோரை விலக்குங்கள்.
பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்தில் ஒரு பங்கு உங்களின் கைக்கு வரும்.
மீனம்:
பூரட்டாதி 4: உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பயம் நீங்கும்.
உத்திரட்டாதி: போராட்டங்கள் குறையும். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.
ரேவதி: முடிக்கப்படாமல் இருந்த விஷயம் ஒன்றை முனைந்து முடிப்பீர்கள்.