ஒரே நாளில் வெறுப்பை சம்பாதித்த ரம்யா கிருஷ்ணன்

Prabha Praneetha
4 years ago
ஒரே நாளில் வெறுப்பை சம்பாதித்த ரம்யா கிருஷ்ணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் நேற்று தொகுத்து வழங்கினார். படையப்பாவில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பஞ்சதந்திரம் மேகி யாக மாறிய ரம்யா கிருஷ்ணன் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

பிக்பாஸ் ரசிகர்கள் ஆண்டவரே சீக்கிரம் ஆண்டவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்கள் என்று கதறும் அளவிற்கு நேற்றைய நிகழ்ச்சி இருந்தது.

ரம்யா கிருஷ்ணன் போட்டியாளர்களிடம் நன்றாக பேசினாலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆதரவாக பேசியது தான் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு காரணம்.

மேலும் இது ஒரு தமிழ் நிகழ்ச்சி என்பதால் கமல்ஹாசன் தன்னுடைய வழக்கமான தமிழ் மொழியில் போட்டியாளர்களிடம் உரையாடுவார்.

ஆனால் ரம்யா கிருஷ்ணன் அதிகமாக ஆங்கிலத்தில் மட்டுமே பேசினார் இதுவும் நிகழ்ச்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4