ரம்யா கிருஷ்ணனால் வெளியேற்றப்பட போகும் போட்டியாளர்

Prabha Praneetha
4 years ago
ரம்யா கிருஷ்ணனால் வெளியேற்றப்பட போகும் போட்டியாளர்

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்தாலும் ஆண்டவர் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் அதிகம் வருகின்றன. இதிலிருந்து கமல்ஹாசனின் ஆளுமை பிக்பாஸில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

எவிக்சன் நடக்கும் ஞாயிற்றுக் கிழமைக்கான இன்றைய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரம்யா கிருஷ்ணன் பார்வையாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை என்பது நமக்கு ஜாலியான ஒரு நாள் ஆனால் போட்டியாளர்களுக்கு செம டென்ஷனான ஒரு நாள் என்று கூறுகிறார்.

வெளியில் இந்த வாரம் எவிக்சன் இருக்குமா இருக்காதா என்றும் இறுதியில் இந்த வாரம் எவிக்சன் கிடையாது என்று ஒரு வதந்தி பரவியுள்ளது. ஆனால் இந்த வாரம் நிச்சயம் எவிக்சன் உண்டு என்று கூறி எவிக்சன் செய்யப் போகும் நபரின் கார்டை எடுக்கிறார்.

கமல் சார் இல்லாததால் இந்த வாரம் நிச்சயம் எவிக்ஷன் இருக்காது என்று நினைத்த போட்டியாளர்களுக்கு ரம்யா கிருஷ்ணனின் இந்த அதிரடி பேச்சு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இருந்தாலும் அதை எதிர்கொள்ள போட்டியாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மேலும் மக்களின் கணிப்புப்படி ஐக்கி தான் இந்த வாரம் கம்மியான ஓட்டுகளை பெற்றிருப்பதாகவும் அவர் தான் வெளியே செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாரம் யார் எவிக்ட் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பை விட கமல்ஹாசன் மீண்டும் எப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகிறது. என்னதான் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினாலும் கமல்ஹாசன் இல்லாத குறை நிகழ்ச்சியில் தெரிவதை நாம் மறுக்க முடியாது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4