29.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: மேலதிகாரி ஒருவருடன் இருந்த மோதல்கள் நீங்கும்.
பரணி: உங்களின் முயற்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
கார்த்திகை 1: அலுவலக விஷயத்தில் நிம்மதி உண்டாகும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நண்பர், உறவினர் வருகையால் வீடு களைகட்டும்.
ரோகிணி: குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல் ஆரோக்கியம் சீராகும்.
மிருகசீரிடம் 1,2: உறவினர் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: சுபநிகழ்ச்சி ஒன்றை நடத்தி வைத்து மகிழ்வீர்கள்.
திருவாதிரை: பங்குச் சந்தை போன்ற விஷயம் மூலம் பணம் வரும்.
புனர்பூசம் 1,2,3: விலகியிருந்த சிலர் வலிய வந்து உங்களுடன் பேசுவார்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். உடன்பிறந்தோருடன் இருந்த பிரச்னை தீரும்.
பூசம்: கலகலப்பான சூழலுடன் இன்றைய நாள் துவங்கி அதே விதமாக முடியும்.
ஆயில்யம்: நினைத்ததை முடிக்கும் நாள். பணியாளர்கள் நிம்மதி காண்பீர்கள்
சிம்மம்:
மகம்: குடும்பத்தினர் பற்றிய மனக்குறை நீங்கி நிம்மதி அடைவீர்கள்.
பூரம்: மனதுக்கு பிரியமானவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
உத்திரம் 1: குழந்தைகளின் நலனில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: சிலருக்கு வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும்
அஸ்தம்: பணி பற்றிய முயற்சி ஒன்றில் நல்ல வெற்றி கிடைக்கும்.
சித்திரை 1,2: பணியிடத்தில் எதிர்பாலினத்தாரால் ஏற்பட்ட பிரச்னை அகலும்.
துலாம்:
சித்திரை 3,4: பிரச்னை ஒன்று தீரும். உறவினர் வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும்.
சுவாதி: குடும்பத்தில் ஏற்படும் கலகலப்பான சூழல் உங்களை மகிழ்விக்கும்.
விசாகம் 1,2,3: விரும்பிய விஷயத்தை சிறு தடைக்குப் பின் முடிப்பீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: உங்களின் மனதிற்கு பிடித்தமான நல்ல விஷயம் நடைபெறும்.
அனுஷம்: பல நாட்களக எதிர்பார்த்த மாற்றம் ஒன்று இன்று ஏற்படும்.
கேட்டை: உங்களின் தேவை ஒன்று நிறைவேறும். எதிர்க் கருத்துடையோர் மாறுவர்.
தனுசு:
மூலம்: பணியில் அக்கறை தேவை. கர்வமற்ற செயல் நன்மை தரும்.
பூராடம்: வீண் விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.
உத்திராடம் 1: பெரியவர்கள், மேலதிகாரியிடம் பக்குவமாக பேச வேண்டும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சீராகும்.
திருவோணம்: மேலதிகாரியின் செயல் ஒன்றால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
அவிட்டம் 1,2: உங்களின் நீண்ட நாள் முயற்சி ஒன்று வெற்றி பெறும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: உங்களது நிதி, பணி வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.
சதயம்: இன்று பணியில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
பூரட்டாதி 1,2,3: மற்றவர்களை விமர்சித்தால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
மீனம்:
பூரட்டாதி 4: உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பயம் நீங்கும்.
உத்திரட்டாதி: போராட்டங்கள் குறையும். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.
ரேவதி: முடிக்கப்படாமல் இருந்த விஷயம் ஒன்றை முனைந்து முடிப்பீர்கள்.