30.11.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
30.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: சந்தோஷமான நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி: தேவையான பொருள் ஒன்றை வாங்குவீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
கார்த்திகை 1: தவறான நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: உறவினர்களின் செயல்பாடுகளால் சந்தோஷம் அதிகமாகும்.
ரோகிணி: உங்களது முயற்சி ஒன்றில் ஏற்பட்டிருந்த தடைகள் தீரும்.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் எடுத்துக் கொண்ட பொறுப்பை எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: இடமாற்றம் செய்யும் எண்ணத்தை கைவிடுவீர்கள்.
திருவாதிரை: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். பணிச்சுமை கூடும்.
புனர்பூசம் 1,2,3: உறவினர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த ஒருவர் விலகுவார்.
பூசம்: வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் நல்ல செய்தியை தருவர்.
ஆயில்யம்: பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன்பிறந்தோரின் அன்பு கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: முயற்சியில் ஏற்பட்ட தடை மெல்லத் தீர்ந்து நம்பிக்கை வரும்.
பூரம்: விலகிய உறவினர்கள் உங்களின் முயற்சி காரணமாக இணைவர்.
உத்திரம் 1: பணியிடத்தில் உள்ள சூழ்நிலை மாறி மனத்திருப்தி தரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நிதானத்துடன் செயல்பட்டு பிரச்னையில் இருந்து விலகுவீர்கள்.
அஸ்தம்: கடன் பிரச்னையை குறைப்பதற்கு புதிய வழியை கண்டறிந்து மகிழ்வீர்கள்.
சித்திரை 1,2: முயற்சிகளை தள்ளிப்போட வேண்டாம். நட்பு வட்டம் விரியும்.

துலாம்: 
சித்திரை 3,4: குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவார்.
சுவாதி: பயம் தீரும். செலவுகள் குறையும். நண்பருக்கு உதவி செய்வீர்கள்.
விசாகம் 1,2,3: பெற்றோரை அனுசரித்து சென்று அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சமூக அக்கறையுடன் செய்யும் செயலால் மனம் நிறையும்.
அனுஷம்: சிறிய விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டாம்.
கேட்டை: சமூகத்தில் உயர்நிலையில் இருப்போருடன் புதிய நட்பு உருவாகும்.

தனுசு: 
மூலம்: பணியாளர்களுக்கு உபரி வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சி ஏற்படும்.
பூராடம்: சகஊழியர்கள் இடையே இருந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும்.
உத்திராடம் 1: உங்களின் தேவைகளில் ஒன்று நிறைவடையும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: செலவு ஒன்று உங்களுக்கு சந்தோஷத்தை தரும். பயம் நீங்கும்.
திருவோணம்: சுபச்செய்தி ஒன்று வரும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.
அவிட்டம் 1,2: நல்லவர்களின் ஆதரவையும், ஆசியையும் பெற்று மகிழ்வீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: குடும்பத்தினருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சதயம்: வருமானம் உயர்வது பற்றிய செய்தி வந்து உங்களை மகிழ்விக்கும்.
பூரட்டாதி 1,2,3: பெற்றோரின் பிரச்னை ஒன்று தீர்வதால் மனதில் நிம்மதி ஏற்படும்.

மீனம்: 
பூரட்டாதி 4: செலவுகளையும் பேச்சையும் குறைத்துக் கொள்வது நல்லது.
உத்திரட்டாதி: நண்பராக நடிப்பவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரேவதி: பணியிடத்தில் இருந்த கருத்துவேறுபாடு தீர்ந்து நிம்மதி தரும்.