01.12.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
01.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: பொது வாழ்வில் உங்களின் புகழ் கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
பரணி: வாழ்வில் பல அனுபவம் பெற்றவர்களை சந்திப்பீர்கள்.
கார்த்திகை 1: நெருங்கிய நண்பர்கள் நல்ல செய்தியை தருவார்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கூடுதலாக வருமானம் வருவதற்கு முயற்சி செய்வீர்கள்.
ரோகிணி: தடைகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். கடன் குறையும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் இருந்து வந்த சிரமங்கள் ஒவ்வொன்றாய் நீங்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: மதியத்திற்கு மேல் உங்களின் மனக்குழப்பம் அகலும்.
திருவாதிரை: செலவு குறைந்து நிம்மதி வரும். உழைப்பால் பலன் உண்டு.
புனர்பூசம் 1,2,3: நல்ல செய்தி வரும் நாள். எதிரிகள் விலகுவர்.

கடகம்: 
புனர்பூசம் 4: குடும்பத்தில் குதுாகலம் கூடும். உழைப்பால் உயர்வீர்கள்.
பூசம்: எந்த விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள்.
ஆயில்யம்: வெளிநாட்டில் இருந்து தொலைபேசி வழியாக வரும் செய்தி மகிழ்ச்சி தரும்.

சிம்மம்: 
மகம்: பணத்தேவைகள் நிறைவேறும். குடும்பத்தினருடன் இருந்த வாக்குவாதம் தீரும்.
பூரம்: உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். கலை ஆர்வம் வரும்.
உத்திரம் 1: அனுகூலச்செய்தி வந்து சேரும். கவலை ஒன்று தீரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நண்பர்களால் நல்ல விஷயம் ஒன்று நிறைவேறும் நாள்.
அஸ்தம்: உங்களின் புகழ் கூடும். புதிய முயற்சி ஒன்று நிறைவேற ஆரம்பிக்கும்.
சித்திரை 1,2: குடும்ப நிர்வாகத்தை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: அதிகமாக உழைத்துப் பலனும் கூடுதலாகப் பெறுவீர்கள்.
சுவாதி: ஒன்றிற்கு மேற்பட்ட இனங்களில் வருமானம் வந்து மகிழ்விக்கும்.
விசாகம் 1,2,3: பிறர் மீது கருணை வைத்து அவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: மன உறுதியோடு செயல்பட்டு பிறரை ஆச்சரியப்பட வைப்பீர்கள்.
அனுஷம்: இன்று வரும் செய்தி உங்களது தொழிலுக்கு துணை புரியும்.
கேட்டை: வாழ்வில் முன்னேற உதவும் பொருட்களை வாங்குவீர்கள்.

தனுசு: 
மூலம்: துணிச்சலோடு செயல்பட்டு தொல்லையில் இருந்து மீளுவீர்கள்.
பூராடம்: உங்களின் திட்டங்களை இன்று நிறைவேற்றி கொள்வீர்கள்..
உத்திராடம் 1: குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையை உருவாக்குவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: இனிய சம்பவங்கள் நடைபெறும். நண்பர்கள் சந்திப்பு உண்டு.
திருவோணம்: குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
அவிட்டம் 1,2: நட்பு வட்டம் விரிவடையும். மனதில் இருந்த பயம் தீரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் நிம்மதி வரும்.
சதயம்: நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று எதிர்பாராத வகையில் இன்று நிறைவேறும்.
பூரட்டாதி 1,2,3: வழக்கு சாதகமாகும். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி: குடும்ப பிரச்னைகள் முடிவுக்கு வருவது உங்கள் கையில்தான் உள்ளது.