நடிகர் அஜித்தின் அதிர்ச்சி அறிவிப்பு!

#TamilCinema #Actor
Prasu
3 years ago
நடிகர் அஜித்தின் அதிர்ச்சி அறிவிப்பு!

இனி தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் இனிமேல் தன்னை தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்
அஜித்குமார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!