விநாயகப்பெருமானை பிள்ளையார் என்று சொல்வது ஏன்?

#spiritual #God
விநாயகப்பெருமானை பிள்ளையார் என்று சொல்வது ஏன்?

நாம் வணங்கும் விநாயகப்பெருமானுக்கு பல வடிவங்களில் பெயர்கள் உள்ளன. அதில் பொதுவாக பிள்ளையார் என்று நம் பேச்சு வழக்கில் குறிப்பிடுவது வழக்கம். இதற்கான காரணங்களைப்பார்க்கலாம்.

விநாயகருக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. கணபதி என்ற சொல்லுக்கு தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள் கொள்ளலாம்.

தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர். சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயக பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார்.

ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தார் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர் கொண்டார். பரமேஸ் வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர்.

இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக... விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன். அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்; தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார்.

தந்தம் முறிந்தது. இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார். இப்படி பல்வேறு பெயர்களை கொண்ட விநாயகரை பிள்ளையார் என்று அழைக்க காரணம் அவர் பிள்ளை மனம் கொண்டவர் என்பது தான். பிள்ளையாரின் அவதார சம்பவத்தின் போது அவரை பார்த்து ரிஷி ஒருவர் பிள்ளையார் என்று கேட்டதால் அவருக்கு பிள்ளையார் என்று பெயர் வந்ததாகவும் பிரமாண்ட புராணம் கூறும் தகவல்கள். இவை தவிர, பல்வேறு தலங்களில் பல்வேறு காரணப்பெயர்களும் உண்டு.

காணபத்தியத்தின் முழுமுதற் கடவுளாகிய விநாயகப்பெருமானை அச்சிறப்பு பெயர்களைக் கொண்டு நமது துன்பங்களுக்கும் தேவைகளுக்கும் வழிபட்டால் நற்பலன் கிடைக்க வாய்ப்புண்டு.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!