சுவாமி ஐயப்பனின் பிறப்பின் ரகசியம்.

#spiritual #God
சுவாமி ஐயப்பனின் பிறப்பின் ரகசியம்.

திருமால் அவதாரமான மோகினிக்கும், சிவபெருமானுக்கும் பிறந்தவராக இவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. ஐயப்பன் என்ற பெயரில் அனைவருக்கும் பரீட்சயமான தெய்வமாக இவர் இருக்கிறார். 

சபரிமலையில் உள்ள இவரது ஆலயத்திற்கு கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். மகிஷி என்ற அரக்கி, பிரம்மனை நோக்கி தவம் செய்து ஒரு வரம் பெற்றிருந்தாள். “திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் பிறக்கும் பிள்ளையால்தான் தன்னுடைய மரணம் நிகழ வேண்டும்” என்பது அந்த வரம். 

அதனாலேயே ஐயப்பனின் பிறப்பு நிகழ்ந்தது. ‘ஹரி’ என்று அழைக்கப்படும் திருமாலுக்கும், ‘ஹரன்’ என்று சொல்லப்படும் சிவபெருமானுக்கும் பிறந்த குழந்தை என்பதால், ஐயப்பனை ‘ஹரிஹரன்’, ‘ஹரிஹரசுதன்’ என்ற பெயர்களில் வணங்குகிறார்கள். 

இவரை பந்தள தேசத்தை ஆட்சி செய்த மன்னன் எடுத்து வளர்த்தான். 12 வயதை எட்டிய ஐயப்பன், தாயின் தலைவலியை போக்குவதற்காக புலிப் பால் கொண்டு வர காட்டிற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மகிஷியை அவர் வதம் செய்தார் என்பது ஐயப்பனின் வரலாறு.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!