புதிய சுவை உருசியான கறிவேப்பிலை மீன் வறுவல்...

#Cooking #Fisherman
புதிய சுவை உருசியான கறிவேப்பிலை மீன் வறுவல்...

தேவையான பொருட்கள்:

  • பாம்ஃப்ரெட் மீன் (Pomfret Fish) – 1 பெரிய கையளவு 
  • தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு அரைப்பதற்கு…
  • கறிவேப்பிலை – 1 கையளவு
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 2-3
  • பூண்டு – 4 பற்கள்
  • பச்சை மிளகாய் – 3-4
  • மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 3-4 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். 
  • பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தை யும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அந்த மசாலாவை மீனில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பிறகு ஒரு தவா அல்லது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை வைத்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4