ஓடிடியில் முதல் இடத்திற்கு போட்டி போடும் தனுஷ், விஜய் சேதுபதி.

#TamilCinema #Actor
ஓடிடியில் முதல் இடத்திற்கு போட்டி போடும் தனுஷ், விஜய் சேதுபதி.

கோலிவுட்டில் ஒரு முக்கியமான நடிகர் என்றால் அதில் தனுஷின் பெயர்  வருவதில் ஐயமில்லை.  ஏனென்றால் தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று தமிழுக்கு பெருமை சேர்த்த பெருமையும் தனுஷையே சாரும். அந்த அளவிற்கு அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார்.

தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள தனுஷ் அடுத்தடுத்து தனது மூன்று படங்களை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் இறுதியாக கர்ணன் படம் தான் திரையரங்கில் வெளியானது. அதனை தொடர்ந்து வந்த ஜெகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மூன்று படங்களை அடுத்தடுத்து ஓடிடியில் வெளியிட உள்ள தனுஷின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படமான அட்ரேங்கி ரே மற்றும் ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாம்.

அதேபோல் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படமும் ஓடிடி ரிலீஸ் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாவதால் இனி தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் மற்றும் வெற்றிமாறன் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ணன் திரைப்படத்திற்கு பின் திரையில் தனுஷை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமே அடைந்தனர். ஏன் தனுஷிற்கு இப்படியான எண்ணம் தோன்றியது என்று தெரியவில்லை. எப்படியாயினும் விஜய்சேதுபதியின் படங்கள் எல்லாம் ஓடிடியில் தான் வெளியாகிறது. இதிலும் தனுஷ் அவருடன் போட்டியிட முனைந்துள்ளார் போலும்..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4